சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நொறுங்கும் பாஜகவின் கனவு.. "இவர்" திமுக பக்கம் வருகிறாராமே.. பரபரக்கும் அறிவாலயம்!

முக அழகிரி திமுகவில் இணைவார் என்று கூறப்படுகிறது

Google Oneindia Tamil News

சென்னை: ஒரு முக்கியமான விஷயம் கசிந்து வருகிறது.. ஆனால் அது புரளியா உண்மையா என்று தெரியவில்லை.. ஒருவேளை புரளியே என்றாலும், அந்த விஷயத்தை கேட்கவே காதுக்கு இனிமையாக இருக்கிறது...!

தேர்தல் நெருங்கி வருகிறது.. வடமாநிலங்களில் உழைப்பாலும், தந்திரத்தாலும், வியூகங்களாலும், வளைத்து போட்ட பாஜக, தென் மாநிலங்களில் குறிப்பாக தமிழ்நாடு, கேரளாவில் மட்டும் கால் வைக்க முடியாமல் திணறி கொண்டிருக்கிறது.

சென்ற முறை எம்பி தேர்தலின்போதே அமித்ஷா சென்னை வந்தபோது, "என்ன செய்வீங்களோ எனக்கு தெரியாது.. தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீர வேண்டும்" என்று சொல்லி விட்டு போனார்.. அதற்கு பிறகு தாமரை மொட்டைக்கூட இன்னும் மலர காணோம்.

ரஜினி

ரஜினி

இந்த முறை தேர்தலிலாவது, காலூன்ற முயற்சித்து வருகிறது.. அதற்காக தனித்து போட்டியிடவும் முடியாமல், ரஜினியை வம்படியாக இழுத்து கொண்டு வரவும் முடியாமல், மிரட்டி பணிய வைத்த அதிமுக மீதே சவாரி செய்ய முடிவு எடுத்துள்ளது. திமுகவை மொத்தமாக டேமேஜ் செய்வது என்றும், ஸ்டாலின் மட்டும் முதல்வராக வந்துவிடவே கூடாது என்பதிலும் படு மும்முரமாக உள்ளது.

அழகிரி

அழகிரி

இதற்கு ஒரு ஆப்ஷன்தான் அழகிரி.. எப்போதுமே அழகிரி மென்மையானவர்.. அன்பானவர்... எந்த அடிமட்ட தொண்டர்கள் என்றாலும் இறங்கி போய் பேசுபவர்.. உழைப்பவர்கள் மேலே வர வேண்டும் என்று மனசார விரும்புவர்... அப்படி எத்தனையோ தொண்டர்களை மேலே கைதூக்கி விட்டனர்.. இவர் மத்திய அமைச்சராக இருந்தபோதும், பலரது அன்பை எளிதாக பெற்றார்.. அந்த வகையில், பாஜக தலைவர்களுக்கும் அழகிரியை ரொம்ப பிடிக்கும்.

திமுக

திமுக

இந்நிலையில், இவர்களின் குடும்ப விவகாரத்தை மையமாக வைத்து, ஸ்டாலினுக்கு எதிரான விஷயங்களை திருப்பிவிட்டு, திமுகவின் வாக்குகளை சிதறடிக்கவும் அழகிரியை பாஜக பயன்படுத்தி கொள்ள முயன்று வருகிறது.. எங்க கிட்ட கூட நீங்க வரவேணாம். சொந்தமாக ஒரு கட்சியை ஆரம்பியுங்கள், நிதி உட்பட எல்லா செலவையும் பார்த்துக்கறோம் என்றுகூட பாஜக மேலிடம் தரப்பில் சொல்லப்பட்டது.. அழகிரி மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி என்று ஆசையும் காட்டப்பட்டது.. ஆனால், அழகிரி எதற்குமே அவசரப்படவில்லை.. ஸ்டாலின் மீது வருத்தம் உள்ளதே தவிர, உணர்ச்சிவசப்பட்டு, திமுகவை பழிவாங்கவும் கனவிலும் நினைக்கவில்லை.

பாஜக

பாஜக

இப்போது ஒரு நல்ல செய்தி காத்து வாக்கில் பறந்து வருகிறது.. அழகிரியும் - ஸ்டாலினும் விரைவில் இணையக்கூடும் என்கிறார்கள்.. சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழலாம் என்பார்களே, அது மாதிரிதான்.. பலமான வாக்கு வங்கி கிடைக்க வேண்டும் என்பதற்காக பாமக, உட்பட பல கட்சிகளை இழுத்து போடும் முயற்சியில் திமுக இறங்கி வரும் நிலையில், அழகிரியை உள்ளே இழுத்துபோட்டால், பல வகைகளில் நன்மை கிடைக்கும் என்று கருதி வருகிறதாம்.

 அறக்கட்டளை

அறக்கட்டளை

கலைஞர் இருக்கும்போதுகூட இப்படித்தான், அழகிரி இருந்தால், தென்மாவட்டங்களை பற்றி எப்போதுமே கவலைப்பட மாட்டார்.. அந்தவகையில், அழகிரியை திமுகவில் இணைக்க முடிவானதாக தெரிகிறது.. அவரை சமாதானப்படுத்தும் முயற்சியிலும் குடும்பத்தில் சிலர் இறங்கி உள்ளனர் போலும்.. அப்போது அழகிரி 2 கண்டிஷன்களை முன்வைத்தாராம்.. ஒன்று, தனக்கு இல்லாவிட்டாலும், மகனுக்கு கட்சியில் நல்ல பதவி வேண்டும், இன்னொன்று, திமுக அறக்கட்டளையில் தன்னை உறுப்பினராக்க வேண்டும் என்றாராம்..

வாக்குகள்

வாக்குகள்

இதற்கு திமுக தலைமையும் ஓகே சொல்லிவிட்டதாம்.. முன்பு இதே அறக்கட்டளையில் உறுப்பினராக்க வேண்டும் என்று அழகிரி கேட்டிருந்தார்.. ஆனால் ஸ்டாலின் மறுத்திருந்தார்.. இப்போது ஓகே சொல்லி இருப்பதை பார்த்தால் எல்லாம் சுபம்போல தெரிகிறது.. இதெல்லாம் உண்மையா என்று தெரியவில்லை.. ஒருவேளை உண்மையாக இருக்கும்பட்சத்தில், திமுகவின் தென்மண்டல வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் அப்படியே வந்து சேரும்.. அத்துடன் பாஜக போட்டு வைத்திருக்கும் கனவும் நொறுங்கிப்போகக்கூடும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்!

English summary
Sources say that MK Azhagiri join in DMK Soon
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X