சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எங்க சர்வேயில் நீங்கதான் முதல்வர்.. தைரியமா வாங்க.. விஜய்க்கு அழைப்பு விடும் பிரஷாந்த் கிஷோர்!

அரசியலுக்கு வரும்படி விஜய்க்கு பிரசாந்த் கிஷோர் அழைப்பு விடுத்ததாக தெரிகிறது

Google Oneindia Tamil News

Recommended Video

    எங்க சர்வேயில் நீங்கதான் முதல்வர்.. தைரியமா வாங்க.. அழைப்பு விடும் பிரஷாந்த் கிஷோர்!

    சென்னை: "நாங்க ஒரு சர்வே எடுத்தோம்.. நீங்கதான் அடுத்த முதல்வர்.. தைரியமா அரசிலுக்கு வாங்க.. தமிழக மக்கள் ஆதரவு உங்களுக்குதான்" என்று நடிகர் விஜய்யிடம் அரசியல் ஆலோசர் பிரசாந்த் கிஷோர் டீம் வலியுறுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    பிரசாந்த் கிஷோர்.. தேர்தல் வியூகங்களை அமைத்து கொடுக்கும் அரசியல் புலி.. சிறந்த ஆலோசகர்.. திறமைசாலி.. ஐபேக் நிறுவன ஆலோசகர். யாருக்காக வேலை பார்க்கிறோமோ அவர்களுக்கு விசுவாசமாக இருப்பதுதான் கிஷோரின் ஸ்பெஷாலிட்டியே!

    ஒரே சமயத்தில் பல்வேறு கட்சிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் இவர் பாகுபாடின்றி வியூகம் அமைத்து தரும் கெட்டிக்காரர். 2 முறை மோடி ஆட்சியில் அமர சாட்சாத் இவர்தான் காரணம்.. ஜெகன்மோகன் ரெட்டி முதல் நிதிஷ் குமார் வரை இவர்களின் வெற்றிக்கு பின்னால் மூளையாக இருந்து செயல்பட்டதும் இவர்தான்!

    சின்ன பையன் நீங்க.. முதல்வர் வாய்ப்பை இழக்கும் ஆதித்யா.. உத்தவ் தாக்கரே மனமாற்றம்.. என்ன நடந்தது? சின்ன பையன் நீங்க.. முதல்வர் வாய்ப்பை இழக்கும் ஆதித்யா.. உத்தவ் தாக்கரே மனமாற்றம்.. என்ன நடந்தது?

     பிரசாந்த் கிஷோர்

    பிரசாந்த் கிஷோர்

    இப்படிப்பட்டவரை நம்ம மாநில அரசியல் கட்சி தலைவர்களும் சந்தித்து பேச ஆரம்பித்தனர். எம்பி தேர்தல் தோல்வியால் நொந்து போயிருந்த நம் முதல்வர் பிரசாந்தை சந்தித்து பேசியதாகவும், 2021-ல் தமிழக சட்டமன்ற மக்களவை தேர்தலில் அதிமுகவை வெற்றி பெற வைக்க பிரசாந்த் கிஷோரை நியமிக்க ஒப்பந்தம் வரை சென்றதாகவும் செய்திகள் வந்தன.

     மய்யம்

    மய்யம்

    இறுதியில் நாமே பார்த்துக் கொள்வோம் என்ற மனநிலைக்கு எடப்பாடி வந்துவிட்டதால் கிஷோரின் உதவி தேவைப்படாமல் போய்விட்டதாக தெரிகிறது. இதற்கு அடுத்தபடியாக கிஷோரை கமல் போய் சந்தித்து பேசினார். பிறகு, மய்யத்துக்காக பிகேபி டீம் ஒருசில வேலைகளிலும் களம் இறங்கியது உண்மைதான் என்றாலும், மய்ய பொறுப்பாளர்களுக்கு இது திருப்திகரமாக இல்லை. அதனால், மய்யம் தொடர்பான விஷயங்களிலும் கிஷோர் டீம் ஆர்வம் காட்ட முடியாமல் போயிற்று.

     வியூகங்கள்

    வியூகங்கள்

    இதற்கு பிறகு கிஷோரை ரஜினி போய் சந்தித்து விட்டு வந்தார். ஆனால் ரஜினி அரசியலுக்குள் நுழையும் சமாச்சாரம் என்பதால் இதில் ஒன்றும் சொல்வதற்கில்லை. அதனால் முதல்கட்ட பேச்சோடு அது முடிந்தது. ஆக மொத்தம், பிகே டீமுக்கு எந்தவித அசைன்ட்மென்ட்டும் தமிழகத்தில் இல்லை, காரணம் இவர் வகுத்து தந்த வியூகங்கள் சமீப காலமாக பெருமளவு கை கொடுக்கவில்லை.

     ஆதரவு

    ஆதரவு

    இந்த சமயத்தில், பிகே டீம் நடிகர் விஜய்யை வலிய போய் சந்தித்து பேசியுள்ளதாக தெரிகிறது. அப்போது, "நாங்கள் ஒரு சர்வே எடுத்தோம்.. அந்த சர்வே முடிவில், 28 சதவித மக்களின் ஆதரவு விஜய்க்கு இருக்கிறது. அவர்தான் அடுத்த முதல்வராக வர வேண்டும் என்ற தமிழக மக்களே விரும்புகிறார்கள். அதனால் அடுத்த ஒரு வருஷத்துக்கான பிளான்களை நாங்கள் போட்டு தருகிறோம்.. அதை விஜய் ஃபாலோ பண்ணாலே போதும்.. அவர்தான் அடுத்த முதல்வர். தமிழக களநிலவரமும் விஜய்க்கு சாதகமாத்தான் இருக்கிறது.. அதனால் தைரியமா அவர் அரசியலுக்கு வரலாம்.

     நடிகர் விஜய்

    நடிகர் விஜய்

    ஆந்திராவில் இளமையான முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி இருக்கிறார். அவரது வெற்றிக்காக நாங்கள் வியூகங்களை வகுத்துக் கொடுத்தோம். அவரும் முதல்வராகிவிட்டார். அதேபோல், விஜய்க்கும் வயது இருக்கிறது. தமிழகத்தில் இளம் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம். அதனால், அவர் வந்தால் சிறப்பான வாய்ப்புகள் இருக்கின்றன" என்று விளக்கமாக எடுத்து சொன்னதாம். இதையெல்லாம் விஜய் அமைதியாக கேட்டுக் கொண்டதாக தெரிகிறது. ஆனால் எந்த பதிலும், முடிவும் உடனடியாக சொல்லவில்லையாம்.

     அமைதி

    அமைதி

    விஜய்யைப் பொறுத்தவரை அவருக்கு உடனடி அரசியல் ஆசை எதுவும் இல்லை. அரசியல் மீது விஜய்க்கு ஒரு ஈர்ப்பு இருப்பது வெளிப்பட்டு வருவதால், இதைதான் பிகே டீம் பயன்படுத்தி கொண்டுள்ளது. விஜய்க்கு ஆர்வம் இருப்பதைவிட, அவரது அப்பாவுக்கு மகனின் முதல்வர் கனவு நீண்ட வருடமாகவே இருக்கிறது. இந்த வயதில் இறங்குவதுதான் அதிரடியாக இருக்கும் என்பது தந்தையின் எண்ணமாம். ஆனால் விஜய் என்ன மாதிரியான முடிவெடுப்பார் என்று தெரியவில்லை.

    English summary
    its said that, prashanth kishores ibac team approached actor vijay and invited him to come to politics
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X