சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வருகிறார் சசிகலா.. ஆரம்பிக்க போகும் ஆட்டம்.."இந்த" தேதியில்தான் விடுதலையாமே.. பரபரக்கும் மன்னார்குடி

வருகிற 3-ம் தேதி சசிகலா விடுதலையாவதாக ஒரு தகவல் கசிந்து வருகிறது

Google Oneindia Tamil News

சென்னை: சிறையிலிருக்கும் சசிகலா வரும் டிசம்பர் மாதம் 3-ம் தேதி விடுதலையாக வாய்ப்பு உள்ளதாக ஒரு தகவல் றெக்கை கட்டி பறந்து வருகிறது.. இதற்கு காரணம், வரும் 5-ம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 4-ம் ஆண்டு நினைவு நாள் என்பதாகும்.. இதையொட்டியே சசிகலா 3-ம் தேதி வெளிவர உள்ளதாக அவரது உறவினர்கள் தரப்பிலேயே சொல்லப்பட்டு வருவதால், மிகுந்த பரபரப்பு அரசியல் வட்டாரத்தில் ஏற்பட்டு வருகிறது.

வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 வருஷ சிறை தண்டனையும், ரூ 10 கோடியே 10 லட்சம் அபராதமும் விதித்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்திருந்தது..

ஒருவேளை அந்த அபராத தொகையை கட்டவில்லையானால், மேலும் ஒரு வருடம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது.

"மோடியின் பார்வை என்னை திகைக்க வைத்தது.. சந்திப்பு உத்வேகத்தை தந்தது".. சைடஸ் குழும தலைவர் பூரிப்பு

சசிகலா

சசிகலா

இதையடுத்து, சில நாட்களுக்கு முன்பு அந்த அபராதத் தொகையான ரூ.10.10 கோடி செலுத்தப்பட்டது.. எனவே சசிகலா எந்த நேரத்திலும் சிறையில் இருந்து விடுதலையாகக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.. ஆனால், அதிமுக, அமமுக தரப்பில் இருந்த எதிர்பார்ப்பு, அவரது உறவினர்களிடம் அவ்வளவாக காணப்படாமலேயே இருந்தது. தற்போது உறவினர்களிடையே மிகப்பெரிய ரியாக்‌ஷன் தென்பட்டு வருகிறது.

அறிவிப்பு

அறிவிப்பு

அதற்கு காரணம், வரும் டிசம்பர் மாதம் 3-ம் தேதி சசிகலா விடுதலையாக இருக்கிறாராம்.. இதை சிறை துறையே தெரிவித்துள்ளதாம்.. ஆனால் வாய்மொழியாகவே கூறியுள்ளதே தவிர, எழுத்துப்பூர்வமாக எந்த வித அறிவிப்பும், ஆதாரமும் இல்லை என்கிறார்கள்.. அதற்கான ஆர்டரும் சசிகலாவின் கைக்கு வரவில்லையாம்.. அநேகமாக விடுதலை குறித்த ஆர்டரை வரும் திங்கள்கிழமை சசிகலாவிடம் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

 ஜெ.நினைவு நாள்

ஜெ.நினைவு நாள்

அப்போதுதான் விடுதலை தேதி உறுதியாக தெரியவரும்.. ஜெயலலிதா நினைவு நாளைக்கு முன்பேயே வந்துவிட வேண்டும் என்று சசிகலா நினைக்கிறாராம். அதனால் எப்படியும் இந்த முறை, ஜெ.நினைவு நாளுக்கு பீச்சுக்கு சென்று சமாதியில் மரியாதை செய்வார் என்று எதிர்பார்க்கப்படுவதால், அதற்கான ஏற்பாடும் செய்யப்படுவதாக தெரிகிறது.

இளவரசி

இளவரசி

விடுதலையாகி வந்தால், தி.நகரில் உள்ள இளவரசியின் வீட்டில்தான் தங்க போகிறாராம்.. இதெல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை என்றாலும், விடுதலை நாளுக்கான அறிகுறி, வெகு அருகிலேயே இருக்கிறது என்பதை மட்டும் உணர முடிகிறது. எப்படியோ, அன்று பீச்சில் ஓங்கி சத்தியம் செய்துவிட்டு போனவர், இன்று மறுபடியும் அதே பீச்சில் சமாதிக்கு சென்றுவிட்டு, தன் அடுத்த ரவுண்டை ஆரம்பிக்க போகிறார் சசிகலா!

English summary
Sources say that, Sasikala may release jail on December Three
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X