சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சூப்பர்ல.. ஜெயிலுக்குள் இருந்தபடியே.. அத்திவரதருக்கு சிறப்பு செய்த சசிகலா.. செம அதிர்ஷ்டம்தான்!

அத்திவரதர் அலங்காரத்துக்கு சசிகலா தரப்பு உதவியதாக கூறப்படுகிறது

Google Oneindia Tamil News

Recommended Video

    Balaji Hassan on Sasikala | சிறையிலிருந்து விரைவில் வெளி வருவார் சசிகலா: பாலாஜி ஹாசன்- வீடியோ

    சென்னை: சூப்பர்ல.. ஜெயிலுக்குள் இருந்தே.. அத்திவரதருக்கு சிறப்பு செய்ய சசிகலாவுக்கு பாக்கியம் கிடைச்சிருக்கு என்றால்.. இதைவிட பெரிய விஷயம் இருக்கா என்ன?

    இயல்பிலேயே அதிக கடவுள் பக்தி உடையவர் சசிகலா. இவரை போலவேதான் ஜெயலலிதாவும். இருவரும் போகாத கோயில் இல்லை.. செய்யாத பூஜைகள் இல்லை. ஸ்ரீரங்கம் கோயில் முதல் எல்லா விசேஷங்களிலும் இருவருமே இணைந்தே சென்று தரிசிப்பார்கள்.

    இப்போது, சசிகலாவால் எந்த கோயில், குளத்துக்கும் போக முடியாத சூழல். சில தினங்களுக்கு முன்புகூட இவருக்கு பிறந்த நாள் வந்தது.

    பிறந்த நாள்

    பிறந்த நாள்

    வழக்கமாக ஜெ. இருக்கும்போது, அவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவார் சசிகலா. அவர் இறந்த பிறகு பிறந்த நாளை கொண்டாடுவதே இல்லை. இந்த முறை பிறந்த நாளுக்குகூட ஜெயிலில் சசிகலா மவுன விரதம்தான் இருந்தார். இந்நிலையில், 40 வருஷத்துக்கு ஒருமுறை காட்சி தரும் அத்திவரதரை சசிகலாவால் தரிசிக்க முடியாத சூழல். இருந்தாலும், அத்திவரதருக்கு சிறப்பு அலங்காரம் செய்ய சசி தரப்புக்கு வாய்ப்பு கிடைத்தது என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.

    பக்தர்கள்

    பக்தர்கள்

    அத்திவரதரின் கடைசி நாட்களில் கூட்டம் நெருக்கி தள்ளியது. அதனால் பக்தர்களுக்காக 2.கி.மீ தூரத்துக்கு பந்தல் போடப்பட்டது. இந்த செலவு முதல், அத்திவரதரின் சிறப்பு அலங்காரங்களும் சசிகலா தரப்பிலேயே செய்ததாக சொல்கிறார்கள். அதேபோல, சாம்பிராணியை தைலம் போல காய்ச்சி, அதை அத்திவரதருக்குப் பூசியதுடன், நீல நிற பட்டாடை, துளசி பட்டாடை என அலங்காரங்களை செய்ததும் சசிகலா தரப்பு செலவுதானாம்.

    பரவசம்

    பரவசம்

    ஆனால் இதற்கு இந்து சமய நிலை துறை அதாவது அதிமுக தரப்புகூட எந்த எதிர்ப்பையும் சொல்ல காணோம். சசிகலாவால் அத்திவரதரை தரிசனம் செய்ய முடியாவிட்டாலும், இப்படி அலங்காரம், ஏற்பாடுகளையாவது சசி தரப்பில் செய்துள்ளது ஓரளவு நிம்மதியை தந்திருக்கும் என தெரிகிறது.

    எடப்பாடியார்

    எடப்பாடியார்

    எப்படியோ.. அத்தி வரதர் வந்தாலும் வந்தார்.. சிறையில் உள்ள சசிகலா உட்பட எல்லாரையுமே பரவசப்படுத்தி விட்டு போய்விட்டார்! அத்திவரதரின் அருள்.. சிறையில் உள்ள சசிகலாவுக்கு சீக்கிரம் கிடைக்கிறதா என்று பார்ப்போம்! என்னதான் சொல்லுங்க... இந்த விஷயத்தில் ஜெயலலிதாவை விட சசிகலா கொடுத்து வைத்த அதிர்ஷ்டசாலிதான்.. அவர் மட்டுமல்ல.. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் கூடத்தான்.

    English summary
    Its is said that, Sasikalas special service in Athi Varadhar Temple and no objection from AIADMK side also
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X