சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாஜகவை வச்சு செய்ய போகும் சீமான்.. இங்குதான் போட்டியாம்.. சீறிப் பாய காத்திருக்கும் தம்பிகள்!

சீமான் காரைக்குடியில் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன

Google Oneindia Tamil News

சென்னை: காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிட வாய்ப்புள்ளதாக ஒரு தகவல் கசிந்துள்ளது.. இதனால் அக்கட்சியின் தொண்டர்கள் படுஉற்சாகமாக காணப்படுகின்றனர்.

விரைவில் தேர்தல் வரப்போகிறது.. அதற்கான வேலைகளில் எல்லா கட்சிகளுமே இறங்கிவிட்டன.. யாருடன் கூட்டணி வைத்துக் கொள்வது? அல்லது தனித்து போட்டியிடுவதா? அல்லது யாருக்கு எத்தனை சீட் என்பன உட்பட விறுவிறு பேச்சுவார்த்தைகளும் துரிதமாகி வருகின்றனர்.

அந்தவகையில், நாம் தமிழர் கட்சி வழக்கம்போல் தனித்து களம் காண போகிறது.. இதை பற்றி சீமான் சொல்லும்போது, "நான் வீழ்ந்தாலும் தமிழ் வாழவேண்டும் என்று நினைத்தவர்கள் தற்போது தமிழ் விழுந்தாலும் நான் வாழவேண்டும் என நினைக்கிறார்கள்... அதனால் வருகின்ற சட்டமன்ற தேர்தலிலும் எப்பொழுதும் போல தனித்து தான் நான் போட்டியிட உள்ளேன்.

 தமிழ் பெருமை

தமிழ் பெருமை

தமிழ் குறித்தும், தமிழ் தேசியம் குறித்தும் பேசியவர்கள் அதற்கு எதிரான காட்சிகளுடன் கூட்டணி வைத்ததால் தான் தமிழின் பெருமையை குறித்து தற்பொழுது பேச முடியாமல் இருக்கிறார்கள்.. நாம் தமிழர் கட்சியிலும் தொகுதி வேட்பாளர்களை நியமிக்கும் பணி நடந்து வருகிறது.. எப்பொழுதும் போல நாம் தமிழர் கட்சி பாஜக, அதிமுக, காங்கிரஸ், அதிமுக என எந்த கட்சியுடனும் நிச்சயமாக சேராது... தனித்தே நிற்கும்" என்றார்.

 தேசிய கட்சிகள்

தேசிய கட்சிகள்

அதிமுக, திமுக திராவிட கட்சிகளாகட்டும், காங்கிரஸ், பாஜக போன்ற தேசிய கட்சிகளாகட்டும், கூட்டணி வைத்தே தேர்தலை சந்தித்து வரும் நிலையில், சீமான் மட்டும் தனியாகவே தேர்தல்களை சந்தித்து வருகிறார். எனினும், "ஒவ்வொரு முறையும் தனித்து போட்டியிடுகிறோம்.. தொடர்ச்சியாக தோல்வி அடைந்தால், தொண்டர்கள் ஒருவித சலிப்பை சந்திப்பார்கள்.. அதனால் இந்த முறை யாருடனாவது கூட்டணி அமைத்தால்தான் கட்சிக்கு நல்லது" என்று சீமானுக்கு ஆலோசனைகளை சிலர் சொல்லியும், தன் நிலைப்பாட்டில் அப்போதிருந்தே உறுதியாக இருந்தாராம் சீமான்.

கடலூர்

கடலூர்

இப்போது சீமான் காரைக்குடியில் போட்டியிடலாம் என்று உறுதிப்படுத்தப்படாத ஒரு தகவல் வெளியாகி உள்ளது.. கடந்த 2016 தேர்தலில் சீமான் கடலூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.. அதனால், வட மாவட்டத்தில் போட்டியிட்ட சீமான், இந்த முறை தென்மாவட்டத்தில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளாராம்.

 எம்எல்ஏ தொகுதி

எம்எல்ஏ தொகுதி

அதனால், தன்னுடைய சொந்த மாவட்டமான ராமநாதபுரம் மாவட்டத்தில் போட்டியிடலாமா அல்லது பக்கத்து மாவட்டமான சிவகங்கை மாவட்டத்தில் போட்டியிடலாமா என்ற ஆலோசனையும் மேற்கொண்டு வருகிறாராம்.. இதில் காரைக்குடி சட்டமன்ற தொகுதியில்தான் சீமான் போட்டியிட முடிவு செய்துள்ளதாக அக்கட்சி நிர்வாகிகள் கூறுகிறார்கள்.

 சிவகங்கை

சிவகங்கை

சிவகங்கையை பொறுத்தவரை சீமானுக்கு மிக நெருக்கமான மாவட்டம்தான்.. ஒருமுறை, காரைக்குடியில் ஒரு ஓட்டுச் சாவடிக்கு வந்து இலங்கை தமிழர்களுக்கு காங்கிரஸ் துரோகம் செய்துவிட்டதாக கூறி, அதிமுகவுக்கு வாக்களிக்குமாறு பிரச்சாரம் செய்துவிட்டும் போனவர்.. "காங்கிரஸ் வேட்பாளர் ப.சிதம்பரத்துக்கு ஓட்டு போடாதீங்க, அதிமுகவுக்கு ஓட்டு போடுங்க" அப்போது, திமுக, காங்கிரஸ் பிரமுகர்களுடன் வாக்குவாதம் நடந்த வரலாறும் உண்டு.

 மத்திய, மாநில அரசுகள்

மத்திய, மாநில அரசுகள்

ஆனால் மத்திய அரசின் மீத்தேன் திட்ட சோதனை முயற்சிக்கு எதிராக மிக மிக தீவிரமாக செயல்பட்டவர் சீமான்.. ஆனால், அதே சீமான் கட்சியை சொந்தமாக ஆரம்பித்தபிறகு, மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக பொங்கியது பெரும் பலமாக அமைந்தது.. குறிப்பாக, மத்திய அரசின் மீத்தேன் திட்ட சோதனை முயற்சிக்கு எதிராக மிக மிக தீவிரமாக இந்த பகுதியில் செயல்பட்டவர் சீமான்... அந்த வகையில் சீமான் காரைக்குடியில் போட்டியிட்டால் அது பலத்தையே பெற்று தரும் என்கிறார்கள் நாம் தமிழர் கட்சியினர்!

English summary
Sources say that, Seeman is likely to contest in Karaikkudi
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X