சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"பிரதமரின் விருப்பமும் இதுதான்".. நறுக்குன்னு சொல்லிய மத்திய அமைச்சர்.. டக்கென தீர்ந்தது பிரச்சினை!

முதல்வர் வேட்பாளர் பிரச்சனையை தீர்த்து வைத்ததே பாஜக தரப்புதானாம்

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக என்ற கட்சி மொத்தமாக பாஜகவின் பிடியில் சென்றுவிடக்கூடாது என்ற ஆதங்க குரல் தமிழகத்தில் ஆங்காங்கே எழுந்து வருகிறது.. இதற்கு காரணம், முதல்வர் வேட்பாளர் விவகாரத்தை தீர்த்து வைத்ததே பாஜகவின் மத்திய அமைச்சர் ஒருவர்தான் என்ற ஒரு பகீர் விஷயம் தற்போது கசிந்துள்ளது.. இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.. ஆனாலும், பாஜகவின் பலம் கூடிவருவதையே இது எடுத்து காட்டுகிறது.

கடந்த வாரம் அதிமுகவின் கோஷ்டி பூசலை தமிழகமே வேடிக்கை பார்த்தது.. இப்படி பகிரங்கமாக கருத்து மோதலில் ஈடுபட்டால், அது தொண்டர்களிடம் அதிருப்தியை சம்பாதித்துவிடுமே அல்லது திமுகவுக்கு சாதகமாக போய்விடுமே என்றெல்லாம் யோசிக்காமல், ஓபிஎஸ் இபிஎஸ் தரப்பு வெளிப்படையாக எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர்.

இவர்களை சமாதானப்படுத்தும் வேலையில் மூத்த அமைச்சர்களும் ஈடுபட்டனர். இறுதியில் அதிமுகவுக்கென புதிதாக அமைக்கப்பட்ட வழிகாட்டும் குழுவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். குழுவில் 5 பேர் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் என்றும், 6 பேர் எடப்பாடி ஆதரவாளர்கள் என்றும் சொல்லப்பட்டது.. ஆனால், இந்த குழு நியமனம் குறித்து நிறைய அதிருப்திகளும் வெளியாகி வருவதை மறுக்க முடியாது.

சென்னை பாஜக

சென்னை பாஜக

கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் 2 பேரும் பேசியதாக சொல்லப்படுகிறது.. அப்போது, அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் விவகாரம் குறித்து அவரிடம் தமிழக அமைச்சர் எடுத்து சொல்லி இருக்கிறார்.. அதற்கு அவர், "இந்த விவகாரத்தினால், மக்கள் மத்தியில் அதிருப்தி உண்டாகிவிட்டது.. இனியும் இந்த பிரச்சனை தொடர்ந்தால் நல்லதல்ல... ஒற்றுமையாக இருந்துதான் தேர்தலை சந்திக்க வேண்டும்.. இதுதான் பிரதமரின் விருப்பமும்கூட" என்று அந்த மத்திய அமைச்சர், தமிழக அமைச்சரிடம் எடுத்து சொன்னாராம்.

பிரதமர் விருப்பம்

பிரதமர் விருப்பம்

கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் 2 பேரும் பேசியதாக சொல்லப்படுகிறது.. அப்போது, அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் விவகாரம் குறித்து அவரிடம் தமிழக அமைச்சர் எடுத்து சொல்லி இருக்கிறார்.. அதற்கு அவர், "இந்த விவகாரத்தினால், மக்கள் மத்தியில் அதிருப்தி உண்டாகிவிட்டது.. இனியும் இந்த பிரச்சனை தொடர்ந்தால் நல்லதல்ல... ஒற்றுமையாக இருந்துதான் தேர்தலை சந்திக்க வேண்டும்.. இதுதான் பிரதமரின் விருப்பமும்கூட" என்று அந்த மத்திய அமைச்சர், தமிழக அமைச்சரிடம் எடுத்து சொன்னாராம்.

முதல்வர் வேட்பாளர்

முதல்வர் வேட்பாளர்

இதற்கு பிறகே சுமூக முடிவு எட்டப்பட்டதாக தெரிகிறது. இந்த பிரச்சனை உருவெடுத்தபோது, அதிமுகவின் முதல்வர் விவகாரம் குறித்து தமிழக பாஜக தலைவர்களிடம் கருத்து கேட்கப்பட்டபோது, அது அவர்கள் உட்கட்சி விவகாரம், கருத்து சொல்வது நாகரீகமாக இருக்காது என்று சொல்லி இருந்த நிலையில், விவகாரத்தை தீர்த்து வைத்ததாக சொல்லப்படும் அந்த மத்திய அமைச்சரும், தமிழக அமைச்சரும் யார் என்றுதான் தெரியவில்லை!

செல்வாக்கு

செல்வாக்கு

"அதேசமயம், அதிமுகவின் உள்விவகாரங்களில் பாஜக ஏன் தலையிட வேண்டும்? அவர்கள் அவங்க கட்சியின் தலைமையை தேர்ந்தெடுத்தால், கூட்டணியில் உள்ள இந்த கட்சி ஏன் மூக்கை நுழைக்க வேண்டும்? எந்த அளவுக்கு பாஜகவிடம் ஒதுங்கி இருக்கிறதோ, அந்த அளவுக்கு அதிமுகவுக்கு செல்வாக்கு கூடும்.. இல்லையென்றால், திமுக தான் தமிழர்களின் தேர்வாக இருக்கும்" என்று அரசியல் நோக்கர்கள் சொல்கிறார்கள்.

English summary
Sources say that, the BJP minister has settled the issue of the CM Candidate
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X