சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அட.. இதுக்கு பேர்தான் சந்துல சிந்து பாடுவது.. காங். தலைவர்களுக்கும் காசை கொட்டி சேப்டி பண்ணிய தலைகள்

எடப்பாடி பழனிசாமி தரப்பு மீது அமித்ஷா கோபமாக உள்ளதாக கூறப்படுகிறது.

Google Oneindia Tamil News

சென்னை: அரசியல் என்பது கொஞ்சம் கூட விவஸ்தை இல்லாதது என்பார்கள் சிலர். அவர்கள் கூறுவது உண்மைதானோ என்று நினைக்கத் தோன்றும் வகையில் சிலரது அரசியல் செயல்பாடுகள் இருக்கும். அதுகுறித்த செய்திதான் இது.

நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் யார் ஜெயிப்பார் என்பது ரிசல்ட் வரும் வரை பெரும் சஸ்பென்சாக இருந்தது. பாஜகதான் பெரும் சீட் எண்ணிக்கையில் ஜெயிக்கும் என எக்ஸிட் போல் கருத்துக் கணிப்புகள் கூறி வந்தன. ஆனாலும் அதை பலரும் நம்பவில்லை.

ஆனால் தேர்தல் முடிவுகள் அதையே உண்மை என நிரூபித்தன. இது இருக்கட்டும். நம்ம மேட்டரே வேறு. அதாவது பாஜக ஜெயிக்கும் என்று ஒரு குரூப் பெரும் நம்பிக்கையில் இருந்தாலும் ஒரு வேளை காங்கிரஸ் ஜெயித்து ஆட்சிக்கு வந்து விட்டால் என்ற சந்தேகமும் அவர்களுக்கு இருந்தது. இதனால் அவர்கள் படு புத்திசாலித்தனமாக ஒரு காரியத்தில் இறங்கிய கதைதான் இது.

தங்கம், வெள்ளி திருட்டு போனாலும் பரவாயில்லை.. ஆனால் தண்ணீர்.. டிரம்களுக்கு பூட்டுபோட்ட கிராமத்தினர்தங்கம், வெள்ளி திருட்டு போனாலும் பரவாயில்லை.. ஆனால் தண்ணீர்.. டிரம்களுக்கு பூட்டுபோட்ட கிராமத்தினர்

திமுக கூட்டணி

திமுக கூட்டணி

தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக கூட்டணிதான் ஜெயிக்கும் என்ற பேச்சு ஆரம்பம் முதலே இருந்தது. அதேசமயம், மத்தியில் பாஜக கூட்டணியே ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கையும் ஆளுங்கட்சிக்கு இருந்தது. இருப்பினும் ஒரு வேளை காங்கிரஸ் வந்து விட்டால் என்ன செய்வது என்ற பயத்தில் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தேர்தல்நிதி

தேர்தல்நிதி

பெரும் விஐபிக்கள் அடங்கிய குழு ஒன்று இதுதொடர்பாக ஒரு வேலையில் இறங்கியது. அதாவது தமிழகத்தைச் சேர்ந்த முக்கியமான காங்கிரஸ் தலைவர்களை அவர்கள் சந்தித்துப் பேசியுள்ளனர். அதன் பின்னர் தேர்தலுக்கான செலவில் ஒரு பகுதியை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் என்று கூறியுள்ளனர். தேடி வந்த ஸ்ரீதேவியை யாராவது வேண்டாம் என்று சொல்வார்களா?

படு ரகசியம்

படு ரகசியம்

பட் இந்த டீல் ரொம்ப நல்லாருக்கே என்று பேக்கரி கடை வடிவேலு டைப்பில் இதை காங்கிரஸ் தரப்பிலும் ஒத்துக் கொண்டார்களாம். பிறகென்ன காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் நிதியாக ஒரு பெரும் தொகை போனதாக சொல்கிறார்கள். இதெல்லாம் படு ரகசியமாக நடந்தேறியதாக சொல்லப்படுகிறது.

நடவடிக்கை

நடவடிக்கை

இப்போது விஷயம் என்னவென்றால் பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவுக்கு இந்த மேட்டர் முழுமையாக போய் விட்டதாம். எவ்வளவு கொடுத்தனர், யார் யாருக்குப் போனது என்பது உள்ளிட்ட விவரங்கள் முழுமையாக போயுள்ளதாக சொல்கிறார்கள். இதுதொடர்பாக அமித் ஷா என்ன மாதிரியான நடவடிக்கை எடுப்பார் என்பது உறுதியாக தெரியவில்லை.

தலைவர்கள்

தலைவர்கள்

ஆனால் ஒரு குறிப்பிட்ட தலைவர் மற்றும் அவரது பிராந்திய தலைவர்கள் மீது அமித் ஷா கடும் கோபமடைந்திருப்பதாக சொல்கிறார்கள். விரைவில் ஏதாவது ஒரு ரூபத்தில் இதை பாஜக வெளிக்காட்டும் என்றும் சொல்லப்படுகிறது. அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா என்று கவுண்டமணி அன்றைக்கே வசனம் பேசினார். ஆனால் இதெல்லாம் உண்மையாகவே நடப்பதுதான் பெரும் வேடிக்கையாக, ஆச்சரியமாக உள்ளது.

English summary
Sources said that, PM Modi and Amit Shah are dissatisfied with Edapadi Palanisamys activities
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X