சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பாஜகவை விடுங்க.. பேஸ்மென்ட் ஆடுது.. அதை சரி பண்ணுங்க.. அதிமுக தொண்டர்கள் சிம்பிள் எதிர்பார்ப்பு!

Google Oneindia Tamil News

சென்னை: இப்பகூட ஏன் தோத்தோம்னு பாஜகவை சரிகட்டதான் அதிமுக பார்க்குதே தவிர, சொந்த கட்சிக்குள் என்ன நடந்தது, என்ன நடக்கிறது, என்ன நடக்க போகிறது என்பதை கவனிக்கவில்லை என்றுதான் தெரிகிறது.

பொதுவாக வாரிசு அரசியல் என்றாலே திமுக என்று பெயர் நிலைத்து வருகிறது. இதற்கு நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்று இந்த முறை அதிமுக நிரூபித்து விட்டது.

இதனால் வாரிசுகள் குறிப்பிட்ட அளவு களம் இறக்கப்பட்டனர். எப்போது முதல்வர் பழனிசாமி இந்த விஷயத்தை கையில் எடுத்தாரோ, அப்போதே அது மைனஸ் ஆகிவிட்டது.

கலைவாணனுக்கு கிடைத்த கலைவாணனுக்கு கிடைத்த "பூஸ்ட்".. திருவாரூர் பிரமாண்ட வெற்றியின் ரகசியம் இதுதானாமே!

கோபம்

கோபம்

அடுத்ததாக வேண்டுமானால் பாஜகவுடன் கூட்டணி வைத்தது, இன்ன பிற இத்தியாதிகளை காரணமாக சொல்லலாம். ஆனால் உங்ககூட கூட்டணி வைக்க போயிதான் 5 இடத்துல தோத்தோம் என்று பியூஷ்கோயல் கோபப்பட்டதற்கு அதிமுகவால் பதில் சொல்ல முடியவில்லை. இந்த கோபத்தால் மத்திய அமைச்சரவையில் அதிமுகவுக்கான அங்கீகாரம் காணாமல் போனது. இருக்கிற கோபத்தை சரிக்கட்ட அதிமுகவும் பாஜகவிடம் முயன்று வருகிறது.

அதிமுக தோல்வி

அதிமுக தோல்வி

ஆனால் உண்மையிலேயே என்ன பிரச்சனை, எதனால் அதிமுக மண்ணை கவ்வியது என்பதை எடப்பாடி தரப்பு அறியவில்லையா, அல்லது அறிய முற்படவில்லையா என தெரியவில்லை. ஏனெனில், எந்த ஒரு இடத்தில் இடைத்தேர்தல் நடந்தாலும் பெரும்பாலும் ஆளும் அரசுதான் வெற்றி பெறுவது இயல்பு. ஒரு இடைத்தேர்தலுக்கே இப்படி என்றால், இவ்வளவு பெரிய தேர்தலில் தோற்றுள்ளது அசிங்கம்தான்.

மாவட்ட செயலாளர்கள்

மாவட்ட செயலாளர்கள்

பல்வேறு விஷயங்களில் ஈடுபட்டு வரும், ஒரு மாநில முதல்வரால் தோல்விக்கான காரணத்தை அறிய முடியாதுதான். அதே சமயத்தில் அமைச்சர் பெருமக்களுக்கும் இதில் ஓரளவுதான் ஊண்மை நிலவரம் தெரியவரும். அப்படியானால் யார்தான் ஒரு தொகுதியின் முழு விவரத்தை விரல் நுனியில் வைத்திருப்பவர்கள் என்றால், அது மாவட்ட செயலாளர்கள்தான்.

விளக்கம் கேட்கவில்லை

விளக்கம் கேட்கவில்லை

ஒரு மாவட்ட செயலாளர் என்பவர் கிட்டத்தட்ட அமைச்சரை போல பலமுள்ளவர். அமைச்சராவது துறை ரீதியான பணிகளில் ஈடுபடுவார்கள். ஆனால் மாவட்ட செயலாளர்கள் அப்படி இல்லை. அந்த மாவட்டத்தையே அக்கு வேறு ஆணி வேறாக புள்ளி விவரங்களுடன் தெரிந்து வைத்திருப்பவர்கள். இப்படிப்பட்டவர்களைதான் முதல்வர் அழைத்து இந்நேரம் பேசியிருக்க வேண்டும். ஆனால் ரிசல்ட் வந்து இத்தனை நாள் ஆகியும், இவர்களை அழைத்து பேசவில்லை, ஏன் தோற்று போனோம் என்று விளக்கம் கேட்கவில்லை.

அதிருப்தி

அதிருப்தி

ஏற்கனவே வாரிசுகளுக்கு சீட் தந்துவிட்ட கடுப்பில் இருக்கும் மாவட்ட செயலாளர்கள் இப்போது முதல்வர் தங்களை கூப்பிட்டு பேசவில்லை என்பதால் மேலும் அதிருப்தியில் உள்ளனராம். நேற்று முன்தினம்கூட முதல்வர், அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகளைதான் அழைத்து பேசியிருக்கிறார்.

சமாதானம்

சமாதானம்

ஒன்று, அமைச்சர்களிடம் பேசுவது, இல்லாவிட்டால் பாஜகவை சமாதானப்படுத்துவதா? நாங்கள் எல்லாம் கணக்கிலேயே இல்லையா? என்று பொருமி தள்ளுகிறார்களாம் மாவட்ட செயலாளர்கள். அம்மா இருந்தபோது, உடனடியாக மாவட்ட செயலாளர்களை அழைத்து பேசி, பிரச்சனைகளை களையும் முயற்சியை எடுத்துவிடுவார் என்கின்றனர் தொண்டர்களும். உண்மையிலேயே, மாவட்ட செயலாளர்களின் முழுமையான பங்கு இல்லாவிட்டால் ஒரு கட்சியே காணாமல், கரைந்தே போகக்கூடும். அந்த நிலைமைக்கு அதிமுகவும் வந்துவிடக்கூடாது என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும்!

English summary
AIADMK District Secretaries are said to be dissatisfied with the Chief Minister. They are worried that the Edapadi Palanisamy did not discuss with us anything about election defeat.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X