சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அப்படியா.. இப்படியா.. இரண்டும் கெட்டான் நிலையில் பாமக.. நடுவில் அதிமுகவின் இப்தார் விருந்து

அஇதிமுகவுடன் பாமகவுக்கு நெருக்கம் குறைந்து வருவதாக கூறப்படுகிறது

Google Oneindia Tamil News

Recommended Video

    ஒரே டிவீட்டில் பாஜகவுக்கும் சேர்த்து பதில் கொடுத்த ராமதாஸ்!- வீடியோ

    சென்னை: கோபம், குழப்பம், ஆற்றாமை, இழப்பு, ஏமாற்றம் என எல்லாம் கலந்த கலவையாக கிடக்கிறதாம் பாமக தரப்பு!

    மத்திய-மாநில அரசுகளை திட்டி தீர்த்து கொண்டிருந்த கட்சி நிறுவனர் திடீரென கூட்டணியில் இணைந்தார். அப்போதே இந்த கூட்டணியை சிலர் கடுமையாக விமர்சித்தனர். ஸ்டாலினும் பேசக்கூடாத வார்த்தையில் கருத்து சொல்லி இருந்தார்.

    அதேபோல, அன்புமணியின் மைத்துனர் விஷ்ணுபிரசாத்தும் "அவங்களோட போயி கூட்டணி வைக்கலாமா? குரு ஆத்மா மன்னிக்குமா?" என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

    ரோஜாவுக்கு அநியாயம் நடக்குதே கேட்பார் யாரும் இல்லையா? இது தகுமா...? ரோஜாவுக்கு அநியாயம் நடக்குதே கேட்பார் யாரும் இல்லையா? இது தகுமா...?

    தேர்தல் ரிசல்ட்

    தேர்தல் ரிசல்ட்

    ஆனால் இவர்கள் எல்லாருமே "மெகா கூட்டணி" உருவானதை பொறுத்து கொள்ள முடியாமல் கொதித்து குமுறுகிறார்கள் என்றுதான் கருதப்பட்டது. தேர்தல் ரிசல்ட்- எல்லாவற்றையும் பொடி பொடியாக்கிவிட்டது. ஏன்தான் அதிமுகவுடன் கூட்டணி வைத்தோம் என பாமக தற்போது வருந்துகிறதா என தெரியவில்லை. ஆனால் அன்புமணிக்காக சீட் வாங்கும் முயற்சி டெல்லியில் தொடர்ந்து நடக்கிறது.

    சட்ட போராட்டம்

    சட்ட போராட்டம்

    இது மட்டுமில்லை.. எட்டுவழிச் சாலை திட்டம் நிறைவேற்றப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்திருந்தார். ஆனால் இந்த திட்டம் கைவிடப்படும் வரை தங்களது சட்டப் போராட்டம் தொடரும் என்று அன்புமணி உடனடி அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருந்தார்.

    அப்செட்

    அப்செட்

    இதனிடையே, இரு தினங்களுக்கு முன்புகூட ராமதாஸ் பேஸ்புக்கில் ஒரு பதிவு போட்டிருந்தார். "வேட்பாளரின் குமுறல் - ஒரு கற்பனை" என்று சொன்னாலும், கிட்டத்தட்ட அது சொந்தக் கதை சோகக்கதை போலவேதான் கருதப்பட்டது. தேர்தல் செலவு, விருந்து செலவு முதல் எல்லாவற்றையும் கொட்டி வைத்திருந்தார். அதனால் அதிமுகவுடனான கூட்டணி விஷயத்தில் பாமக தரப்பு அப்செட் என்றுதான் தெரிகிறது. எனினும் அதிமுகவின் இப்தார் நோன்பில் கலந்து கொண்டு கூட்டணி தர்மத்தை கடைபிடித்துள்ளது பாமக!

    சிவி சண்முகம்

    சிவி சண்முகம்

    முன்னதாக, மற்றொரு தகவலும் கசிந்தது. இப்தார் நோன்புக்கு அழைப்பு விடுக்க சிவி சண்முகம் தைலாபுரத்துக்கு சென்றிருக்கிறார். அப்போது, "திட்டம் போட்டு எங்களை பழிவாங்கிட்டீங்களே" என்று வாய்விட்டு சொல்லி இருக்கிறார் நிறுவனர். (அவங்களும் சேர்ந்துதான் தோற்றார்கள் என்பது வேறு விஷயம்)

    8 வழிச்சாலை

    8 வழிச்சாலை

    மற்றொரு புறம் பாஜகவை முழுவதுமாக பாமக வெறுக்கவில்லை என்றே தெரிகிறது. அன்புமணிக்கு சீட் கிடைக்கும்வரை எந்தவித எதிர்ப்பு வார்த்தைகளும், அதிருப்தி கருத்துக்களும் வெளிவராது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. 8 வழிச்சாலை விவகாரம் தலைதூக்கியபோதாகட்டும், இந்தி திணிப்பு விவகாரம் தலைதூக்கியபோதாகட்டும், அமைதி காத்தது பாமக தரப்பு.

    அன்புமணி

    அன்புமணி

    அதேசமயம், 8 வழிச்சாலையில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு, இந்தி திணிப்பு கட்டாயமில்லை என்ற உத்தரவு வந்ததும், இவைகளை இருகரம் கொண்டு நீட்டியும் வரவேற்றது. அதாவது தமிழக நலன் பாமகவுக்கு உள்ளது என்றாலும், பாஜகவை பகிரங்கமாக எதிர்க்கவில்லை என்பதே இதன்மூலம் புலப்படுகிறது. ஒருவேளை அன்புமணிக்கு சீட் கிடைக்காவிட்டால், அது எந்தமாதிரியான நிலைப்பாட்டை எடுக்கும்படி பாமக தள்ளப்படுமோ தெரியாது.

    ஆக.. அதிமுகவை பாமக கழட்டி விடபோகிறதா, அல்லது நெருக்கம் குறைய போகிறதா என்பதெல்லாம் இனிமேல்தான் தெரியவரும்!

    English summary
    It is said that, there is a disagreement between the PMK over AIADMK. Dr Ramadoss thinks he is defeated by a coalition only
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X