சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எல்லாம் செஞ்சும்.. எல்லோருக்கும் கொடுத்தும்.. எப்படி தோத்தோம்.. அமமுகவின் அதிரடி ஆய்வு!

வாக்கு எந்திர கோளாறு காரணமாக கோர்ட்டுக்கு அமமுக செல்ல போவதாக கூறப்படுகிறது

Google Oneindia Tamil News

சென்னை: செம கடுப்பில் உள்ளது அமமுக.. ஏன் இப்படி அநியாயமா தோத்து போய்ட்டோம் என்று கொஞ்சம் கொஞ்சமாக களம் இறங்கி உண்மைகளை தூர் வாரி போட்டு வருகிறது!

அதிமுக, திமுகவே சற்று நடுங்கும் அளவுக்குத்தான் அமமுகவின் செயல்பாடுகள் இருந்தன. சத்தமே இல்லாமல் தினகரன் என்னமோ தேர்தல் வேலை செய்து கொண்டிருக்கிறார், தீவிர களப்பணியில் உள்ளார், உள்ளடி வேலை ஆழமாக நடக்கிறது என்றெல்லாம் பிரச்சார சமயங்களில் தகவல்கள் வந்தன.

எப்படியும் எம்பி தேர்தலில் குறைந்தது 5 இடங்கள், மற்றவற்றில் ஆட்சியையே கவிழ்க்கும் அளவுக்கு வாக்கு வங்கியை எட்டிபிடிப்பார் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது.

"கை" எப்படி இருக்கு.. அப்படியே கருணாநிதி போல ஸ்டாலினும்.. காங். எம்பியின் பெருமிதம்!

குமுறல்

குமுறல்

ஆனால் எல்லாமே புஸ்ஸாகிவிட்டது. இந்த தோல்வியை தினகரன் உள்ளிட்ட அமமுக வேட்பாளர்களால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. குக்கர் கிடைக்கலை, தொப்பி கிடைக்கல, பரிசு பெட்டி லேட்டாகத்தான் கைக்கு வந்தது, திமுக, தொகுதிகளில் அதிமுக தரப்பினர் அள்ளி இறைத்த தாராளங்கள், இது எல்லாமே குழப்பி அடித்துவிட்டது என அமமுக ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகளே புலம்பி தள்ளிவிட்டனர்.

பிரச்சனை

பிரச்சனை

மற்றவர்கள் இதெல்லாம் சொல்கிறார்கள் என்றால், தினகரன் மட்டும் ஓட்டு மிஷினை பற்றி பேச ஆரம்பித்தார். ரிசல்ட்டுக்கு மறுநாளே, ஓட்டு மிஷின்கள் குளறுபடி, பூத் ஏஜெண்ட் ஓட்டு எங்கே போனது என்று மீடியாவிடமும் பிரச்சனையை முன்வைத்தார்.

தினகரன்

தினகரன்

சிறையில் ஏக கடுப்பில் இருந்த சசிகலாவிடமும், இதே ஓட்டு மிஷினை பத்தியே புலம்பி உள்ளார். இப்போது விஷயம் என்னவென்றால், எந்த தொகுதியில் அமமுகவுக்கு ஓட்டு பதிவாகாமல் போனது என்ற விஷயத்தை கண்டுபிடிக்க முழுமூச்சாக இறங்கி விட்டார் தினகரன். அவருக்கு இன்னும் ஓட்டு மிஷின்மேலேயே எண்ணமும், சந்தேகமும், குழப்பமும் உள்ளது.

600 மிஷின்கள்

600 மிஷின்கள்

இதுவரைக்கும் கிட்டத்தட்ட 600 ஓட்டு மிஷினில் அமமுகவுக்கு ஒரு ஓட்டுகூட விழவில்லை என்று தெரியவந்துள்ளதாம். அதனால் மற்ற இடங்களில் உள்ள மிஷின்களில் பதிவான அமமுக ஓட்டுக்கள் குறித்து களப்பணியில் இறங்கி உள்ளது தினகரன் தரப்பு.

யாருக்கு போனது?

யாருக்கு போனது?

ஒருவேளை பெருவாரியான இடங்களில் அமமுகவுக்கு ஓட்டு இல்லாமல் இப்படி மிஷின்கள் காலியாக இருந்தால், கோர்ட்டுக்கு கூட தினகரன் செல்ல தயங்க மாட்டார் என்றே தெரிகிறது. அது சரி, ஒரு ஓட்டும் விழலைன்னா... அதெல்லாம் எங்க, யாருக்குதான் போயிருக்கும்?

English summary
TTV Dinakaran says that the Voting machine is the reason for the AMMKs defeat. It is said that the AMMK will approach the court and file case against it.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X