தென் சென்னைக்கு இந்த வருடமே சிறந்த விருந்துதான்.. செம.. தமிழ்நாடு வெதர்மேன் சூப்பர் போஸ்ட்!
தென் சென்னையில் மிகவும் சிறப்பாக மழை பெய்து வருகிறது. தென் சென்னைக்கு இந்த வருடமே சிறந்த விருந்துதான் என்று தமிழ்நாடு வெதர்மேன் போஸ்ட் செய்துள்ளார்.
Recommended Video
சென்னை: தென் சென்னையில் மிகவும் சிறப்பாக மழை பெய்து வருகிறது. தென் சென்னைக்கு இந்த வருடமே சிறந்த விருந்துதான் என்று தமிழ்நாடு வெதர்மேன் போஸ்ட் செய்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. முக்கியமாக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில் தொடர்ந்து மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னையில் காலையில் இருந்து கனமழை பெய்தது.இந்த நிலையில் தமிழ்நாடு மழை தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் விளக்கம் அளித்துள்ளார்.
மேட்டுப்பாளையத்தில் 17 பேரை பலி கொண்டது 20 அடி உயர தீண்டாமை சுவர்: மு.க.ஸ்டாலின்
சென்னை
வெதர்மேன் தனது போஸ்டில், தென் சென்னையில் மிகவும் சிறப்பாக மழை பெய்து வருகிறது. தென் சென்னைக்கு இந்த வருடமே சிறந்த விருந்துதான். அதே சமயம் வடசென்னை மத்திய சென்னையில் கலவையாக மழை பெய்து இருக்கிறது.
அதிகம்
சென்னையில் மழை மிகவும் அதிக அளவில் பெய்யும் . ஆனால் நீண்ட நேரம் பெய்யாது. தொடர்ந்து மழை பெய்துவிட்டு பின் நின்றுவிடும். அடுத்து கிழக்கு நோக்கிய காற்று டிசம்பர் 7ம் தேதிக்கு பிறகே வரும்.
எல்லோரும் எதிர்பார்ப்பு
எல்லோரும் எதிர்பார்த்தது போலவே குன்னூர் பகுதியில் அதிக அளவில் மழை பெய்துள்ளது. அதேபோல் ராமநாதபுரத்தில் தொடர்ந்து மழை பெறுகிறது என்று குறிப்பிட்டுள்ளனர். அவர் தன்னுடைய இன்னொரு போஸ்டில் சென்னை மழையால் ஒரு நல்ல செய்தியும் கெட்ட செய்தியும் கிடைத்துள்ளது. இந்த மழையால் சென்னையில் ஏரிகள் எல்லாம் நிரம்பி வருகிறது.
அடுத்த ஒரு வருடம்
இந்த மழையால் சென்னையில் அடுத்த ஒரு வருடத்திற்கு தண்ணீர் பஞ்சம் ஏற்படாது. கெட்ட செய்தி மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து மக்கள் இறந்தது. அங்கு திடீர் என்று அதிக அளவில் மேகம் வெடித்து மழை பெய்துள்ளது, என்று வெதர்மேன் குறிப்பிட்டுள்ளார்.