சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தென்மேற்குப் பருவமழை கொட்டுது - குடிநீருக்கு பிரச்சினையில்லை.. கோவைவாசிகள் குஷி

தென்மேற்குப் பருவமழை கோவை சுற்றுவட்டாரப்பகுதிகளில் பெய்து வருகிறது. சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் குடிநீர் பற்றாக்குறை நீங்கும் என்று கோவைவாசிகள் குஷியோடு உள்ளனர்.

Google Oneindia Tamil News

சென்னை: தென்மேற்குப் பருவக்காற்று மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் வீசினாலே மழை ஆரம்பித்து விடும் குற்றால அருவிகள் ஆர்ப்பரிக்கும். ஜூன் 1ஆம் தேதி தென்மேற்குப் பருவமழை குறித்து வைத்தது போல தொடங்கியது. வெயில் ஒரு சில மாவட்டங்களில் வெளுத்து வாங்கினாலும் மழை பல மாவட்டங்களில் பெய்து வருகிறது. கோவை சுற்றுவட்டாரப்பகுதிகளில் கடந்த ஒரு மணிநேரமாக பெய்து வரும் மழையால் இந்த ஆண்டு குடிநீர் பற்றாக்குறை வர வாய்ப்பேயில்லை என்று குஷியோடு இருக்கிறார்கள் கோவைவாசிகள்.

Recommended Video

    Weather Update : தென்மேற்கு பருவக்காற்று வருகிறது..எங்கெல்லாம் பெய்யும்?

    தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு அதிகளவு பெய்யும் என வானிலை மையம் கணித்துள்ளது. இந்நிலையில் கோவை மேற்கு மலைத்தொடர்ச்சியை ஒட்டியிருக்கும் சின்னதடாகம், வீரபாண்டி சுற்று வட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்து வருகிறது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் உயரும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

    சிறுவாணி பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் குடி நீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்கும். தற்போது பெய்து வரும் மழை தொடர்வதற்கு சாதகமான சூழல் நிலவுவதால் விவசாயிகள் வானம் பார்த்த பூமியில் விவசாயம் செய்வதற்கு தயாராக இருக்கின்றனர். மேலும் தூர்வாரப்பட்ட குளம், குட்டைகளில் நீர் நிரம்பி வருவதும் மக்களிடம் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர்.

    4 மாவட்ட மக்களே .. ஹேப்பி நியூஸ்.. ஜோரா மழை பெய்யப் போகுது.. என்ஜாய் செய்ய ரெடியாகுங்க!4 மாவட்ட மக்களே .. ஹேப்பி நியூஸ்.. ஜோரா மழை பெய்யப் போகுது.. என்ஜாய் செய்ய ரெடியாகுங்க!

    மழைக்காலம்

    மழைக்காலம்

    தமிழகத்தில் தென் மேற்குப் பருவமழைக் காலம் நிலவி வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், உள்மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
    அது போல பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

    மழையால் உயரும் நீர்மட்டம்

    மழையால் உயரும் நீர்மட்டம்

    கடந்த சில வாரங்களாகவே கோவையில் மழை கொட்டி வருகிறது. செவ்வாய்கிழமை காலை நிலவரப்படி கோவை மாவட்டம் வால்பாறை, சோலையார் ஆகிய இடங்களில் அதிகபட்சமாக தலா 6 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இந்த ஆண்டு பெய்யும் பொதுமக்களையும் விவசாயிகளையும் குஷிப்படுத்தியுள்ளது.

    சென்னை வானிலை மையம்

    சென்னை வானிலை மையம்

    தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 48 மணி நேரத்திற்குத் தென்மேற்குப் பருவக் காற்று மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழக கடலோர மாவட்டங்கள், தென் தமிழகம், உள் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழையும், என்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இடியோடு மழை பெய்யும்

    இடியோடு மழை பெய்யும்

    தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, வேலூர், கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும்.சென்னையைப் பொறுத்தவரை நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    கொட்டிய மழை

    கொட்டிய மழை

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் இன்று சத்தியமங்கலம், பவானிசாகர் மற்றும் பண்ணாரி பகுதிகளில் சுமார் அரை மணி நேரம் பலத்த மழை பெய்தது. மழையின் காரணமாக சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியது. தற்போது பெய்த மழை விவசாயத்திற்கு பேருதவியாக உள்ளதோடு சத்தியமங்கலம் வனப் பகுதியிலும் மழை பெய்ததால் வனவிலங்குகளின் குடிநீர் தேவை பூர்த்தியடைந்துள்ளது என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    English summary
    The Southwest monsoon hit Coimbatore on Wednesday. Coimbatore district on today though most parts of the district received normal rain.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X