சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னை புறநகர் ரயில்களில் பயணிக்க 2 டோஸ் சான்றிதழ் கட்டாயமில்லை.. தெற்கு ரயில்வே அறிவிப்பு!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை புறநகர் ரயில்களில் பயணிக்க 2 டோஸ் தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமில்லை என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 2 டோஸ் தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் என்ற உத்தரவு திரும்ப பெறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பிப். 1 முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறப்பு- அமைச்சர் அதிரடி அறிவிப்புதமிழகத்தில் பிப். 1 முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறப்பு- அமைச்சர் அதிரடி அறிவிப்பு

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வந்தது. பாதிப்பு 30,000-ஐ கடந்து சென்றதால்
கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர தினமும் இரவு ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

பல்வேறு கட்டுப்பாடுகள்

பல்வேறு கட்டுப்பாடுகள்

தொற்று அதிகரித்து வந்ததால் சென்னை புறநகர் மின்சாரா ரயில்களில் பயணிக்க தெற்கு ரயில்வேயும் பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டு வந்தது. அதாவது 2 டோஸ் தடுப்பூசி போட்டிருந்தால் மட்டுமே புறநகர் ரயிலில் பயணிக்க முடியும் என்று உத்தரவிட்டது. புறநகர் ரயிலில் மாஸ்க் அணியாமல் பயணித்தால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும்.

 2 டோஸ் கட்டாயம்

2 டோஸ் கட்டாயம்

மாஸ்க் அணியாமல் ரயில் நிலையத்தில் சுற்றினாலும் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்றும் புறநகர் ரயிலில் செல்பவர்கள் வருகிற 31-ம் தேதி வரை UTS செயலில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாது என்றும் தெற்கு ரயில்வே அறிவித்து இருந்தது. சென்னை புறநகர் ரயில்களில் பயணிகளுக்கான மாதாந்திர சீசன் டிக்கெட் பெற, கொரோனா தடுப்பூசி 2 டோஸ் போட்டிருப்பது அவசியம் என்றும் கூறப்பட்டு இருந்தது.

2 டோஸ் தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமில்லை

2 டோஸ் தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமில்லை

தற்போது தமிழகத்தில் கொரோனா குறைந்து வருவதால் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டது. பள்ளி, கல்லுரிகளும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் புறநகர் ரயில்களில் பயணம் செய்ய விதிக்கப்பட்டு இருந்த கட்டுப்பாடுகளை தெற்கு ரயில்வேயும் விளக்கி உள்ளது. அதாவது சென்னை புறநகர் ரயிலில் பயணிக்க 2 டோஸ் தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமில்லை என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

வேறு அறிவிப்புகள் என்னென்ன?

வேறு அறிவிப்புகள் என்னென்ன?

ரயில் டிக்கெட் வாங்கும் போதே தடுப்பூசி சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டுமென கூறப்பட்டு இருந்த நிலையில் தற்போது அது நீக்கப்பட்டுள்ளது. இதேபோல் மாதாந்திர சீசன் டிக்கெட் பெற, கொரோனா தடுப்பூசி 2 டோஸ் போட்டிருக்கும் சான்றிதழ் அவசியம் இல்லை என்றும் தெற்கு ரயில்வே கூறியுள்ளது. யூடிஎஸ் செயலி மூலமும் பயணித்திற்கான புறநகர் ரயில் டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதே வேளையில் ரயில்களில் மாஸ்க் அணிந்து, தனிமனித இடைவெளியை பின்பற்றி பயணிக்க வேண்டும் என்றும் தெற்கு ரயில்வே அறிவுறுத்தி உள்ளது.

English summary
Southern Railway has announced that 2 dose vaccination certificate is not mandatory for travel on Chennai suburban trains. Mandatory 2-dose vaccination certificate withdrawal order
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X