சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தெற்கு ரயில்வேயில் 3596 பணியிடங்கள் குறைப்பு? விரைவில் அறிவிப்பு வருகிறது

Google Oneindia Tamil News

சென்னை: தெற்கு ரயில்வேயில் 3596 பணியிடங்கள் குறைக்கப்பட உள்ளதாகவும் பணியிடங்கள் குறைப்பு தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனம் என்றால் அது ரயில்வே தான்.அரசு நிறுவனமான ரயில்வேயில் 12,18,335 பேர் பணியாற்றி வருகிறார்கள்.

இந்நிலையில் ரயில்வே துறையில் காலிப்பணியிடங்களை 50 சதவீதம் ஆக குறைக்கவும், புதிய பணியிடங்களை உருவாக்குவதை நிறுத்தி வைக்கவும் ரயில்வே துறை அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

பத்திர பதிவில் சூப்பர் மாற்றம்.. ஆக. 1ம் தேதி முதல் பத்திரபதிவு செய்தவுடன் பட்டா மாறும்! பத்திர பதிவில் சூப்பர் மாற்றம்.. ஆக. 1ம் தேதி முதல் பத்திரபதிவு செய்தவுடன் பட்டா மாறும்!

தெற்கு ரயில்வே

தெற்கு ரயில்வே

இந்நிலையில் தெற்கு ரயில்வேயில் பாதுகாப்பு இல்லாத பணியிடங்களில் தற்போதுள்ள காலியிடங்கள் பற்றி கணக்கெடுக்கும் பணிகள் கோட்டவாரியாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கோட்ட மேலாளர்கள், துறை தலைவர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் பாதுகாப்பு இல்லாத பணிகள் குறித்து கணக்கு எடுத்து அளிக்க உள்ளதாவும், அதில் 50 சதவீதம் இடங்கள் குறைக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மொத்தம் 60 ஆயிரம்

மொத்தம் 60 ஆயிரம்

அப்படி பார்த்தால் தெற்கு ரயில்வேயில் 3,596 பாதுகாப்பு இல்லாதபணியிடங்களும், நாடு முழுவதும் 60 ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட பணியிடங்கள் குறைக்கப்படலாம் என்றும் ஆங்கில ஊடக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது தெற்கு ரயில்வேயில் மட்டும் பாதுகாப்பு இல்லாத பணியிடங்கள் 28,923 ஆக உள்ளது. அதில் தற்போது 21,731 பேர் பணியாற்றுகிறார்கள். 7,211 பணியிடங்கள் காலியாக உள்ளது.

தெற்கு ரயில்வே வேலை

தெற்கு ரயில்வே வேலை

ஜூலை 1ம் தேதி நிலவரப்படி தெற்கு ரயில்வேயில் 7,211 காலிப்பணியிடங்களில், 2,509 பணியிடங்கள் 6 மண்டலங்களிலும், 4,683 பணியிடங்கள் ஒர்க்சாப் போன்ற பணிமனைகளிலும் காலியாக உள்ளது. இதில் 3596 பணியிடங்கள் விரைவில் ஒப்படைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது ரயில்வே ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஊழியர்கள் அதிர்ச்சி

ஊழியர்கள் அதிர்ச்சி

பல்வேறு ரயில்வே ஊழியர்களின் தொழிற்சங்கங்கள் இந்த நடவடிக்கையை ரயில்வேயில் தனியார்மயமாக்குவதற்கு ஒரு முன்னோடி என்று கூறியுள்ளன. மேலும் ரயில்வே காலி பணியிடங்களை ஒப்படைக்க ஒருவேளை முடிவு செய்தால் நிரப்பப்படாமல் இருக்கும் பதவிகளை சரண்டர் செய்தவற்கான காரணத்தின் பின்னணியில் உள்ள விஷயங்கள் தான் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. 2000 ஆம் ஆண்டின் முற்பகுதி வரை, பல ஆண்டுகளாக, ஏராளமான பதவிகள் காலியாக இருந்தன, ரயில்வே ஒருபோதும் அதை சரண்டர் செய் சொல்லவில்லை. சமீபத்திய முன்னேற்றங்களைப் பார்த்தால், உடனடியாக இல்லாவிட்டாலும், இறுதியில் இந்த நடவடிக்கை தற்காலிக ஊழியர்களின் பங்கை அதிகரிக்கும், இதன் மூலம் தனியார்கள் ரயில்களை இயக்க உகந்த சூழ்நிலையை உருவாக்கும் "என்று ரயில்வே ஊழியர் சங்கத்தை சேர்ந்த ஒருவர் கூறினார்.

English summary
Southern Railway plans to surrender as many as 3,596 vacant posts in non-safety categories
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X