சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னையில் குளுகுளு ஏசி புறநகர் ரயில்களை இயக்க திட்டம்... முக்கிய ஆலோசனை குறித்து தகவல்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் குளிர்சாதன வசதியுடன் கூடிய புறநகர் ரயில்களை இயக்குவது குறித்து கடந்த வாரம் தெற்கு ரயில்வேயில் நடந்த அதிகாரிகள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மெட்ரோ ரயில்கள் மட்டும் முற்றிலும் குளிர்சாதன வசதியுடன் இயக்கப்படுகிறது. இந்த ரயில்களை நடுத்தர மற்றும் செல்வந்தர்கள் விரும்பி பயன்படுத்துகிறார்கள். அதேநேரம் சென்னையில் புறநகர் ரயில்களை ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் அதிகம் பயன்படுத்துகிறார்கள்.

Southern Railway Plans for AC trains on suburban network in chennai

சென்னையில் புறநகர் ரயில் வழித்தடத்தில் குளிர்சாதன வசதியுடன் ரயில்கள் இதுவரை இயக்கப்பட்டதில்லை. குளிர்சாத வசதியுடன் கூடிய பெட்டிகள் கூட இதுவரை புறநகர் ரயில்கள் இணைக்கப்பட்டதில்லை. அதேநேரம் மும்பையில் மட்டுமே புறநகர் ஏசி ரயில்கள் இயக்கப்படுகிறது.

இந்நிலையில் ஏசி புறநகர் ரயில்களை இயக்குவது குறித்து தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ராகுல் ஜெயின் தலைமையில் அதிகாரிகள் கடந்த வாரம் விவாதித்தனர். தற்போது குறைந்த பட்சம் 5 ரூபாய் ஆகவும், முதல் வகுப்பு என்றால் 40 ரூபாய் ஆகவும் கட்டணம் உள்ளது. ஏசி வசதியுடன் பயணிக்க ரூ55 ஆக கட்டணம் நிர்ணயிக்கப்படலாம் என கூறப்படுகிறது. அதாவது முதல்வகுப்பு கட்டணத்தை விட 1.3 மடங்கு அதிகமாக இருக்கும் என தெரிகிறது.

அன்னையர் தினத்தில் 48 வயது இரோம் சர்மிளாவுக்கு இரட்டை குழந்தைகள்! அன்னையர் தினத்தில் 48 வயது இரோம் சர்மிளாவுக்கு இரட்டை குழந்தைகள்!

முதல்கட்டமாக சென்னை கடற்கரை ரயில் நிலையத்தல் இருந்து செங்கல்பட்டுக்கு ஏசி லோக்கல் ரயில்களை சில நிறுத்தங்களில் மட்டும் நின்று செல்லும் வகையில் பாஸ்ட் ரயிலாக இயக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. எனினும் அதிகாரப்பூர்வமாக எந்தவிதமான அறிவிப்பையும் தெற்கு ரயில்வே இதுபற்றி தெரிவிக்கவில்லை.

English summary
Southern Railway officials discussed the possibility of running air-conditioned EMUs on Chennai
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X