சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அரபிக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. தென்மேற்கு பருவ மழை குறித்து சூப்பர் அப்டேட்

Google Oneindia Tamil News

சென்னை: தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அக்னி வெயில் இன்றுடன் முடிகிறது. இதனால் இனி வெயிலின் தாக்கம் படிப்படியாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒருபுறம் எனில் ஜுன் மாதத்தில் வழக்கமாக தென்மேற்கு பருவ மழை தொடங்கி விடும்.

இதற்காக காற்றழுத்த தாழ்வு பகுதிகள் கேரளாவை ஒட்டி உருவாகும்..இது சரியாக ஆண்டுதோறும் ஜுன் முதல் வாரத்தில் தொங்கும்.இந்த தென் மேற்கு பருவ மழை தான் இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களுக்கு ஜூன் முதல் செப்டம்பர் வரை மழையை கொடுக்கிறது.

சூப்பர்.. தமிழகத்தில் கொட்ட போகுது மழை.. 5 மாவட்டங்களில் இடி மின்னலுடன் பெய்யும்.. வானிலை மையம் சூப்பர்.. தமிழகத்தில் கொட்ட போகுது மழை.. 5 மாவட்டங்களில் இடி மின்னலுடன் பெய்யும்.. வானிலை மையம்

எங்கு அதிக மழை

எங்கு அதிக மழை

அதேநேரம் தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையால் தான் அதிக அளவு மழை பெறும். தென்மேற்கு பருவ மழையால் ஓரளவே மழை பெறும்.அதேநேரம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய அதாவது கேரளாவை ஒட்டியுள்ள கன்னியாகுமரி, தென்காசி, தேனி, நீலகிரி, கோவை, உள்ளிட்ட மாவட்டங்களில் தென்மேற்கு பருவ மழையால் ஒரளவு நல்ல மழை பெய்யும்.

காற்றழுத்த தாழ்வு பகுதி

காற்றழுத்த தாழ்வு பகுதி

இந்த சூழலில் தென்மேற்கு பருவ மழை ஜூன் 1ம் தேதி தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக இன்றையவானிலை அறிவிப்பில் தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கிழக்க மத்திய அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாயப்பு உள்ளது. எனவே வரும் 31ம் தேதி வரை மீனவர்கள் அரபிக்கடலின் ஆழ்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளது.

கேரளாவுக்கு மழை

கேரளாவுக்கு மழை

இதற்கிடையே இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்மேற்கு அரேபிய கடலில் புயல் சின்னம் இப்போது மேற்கு-மத்திய மற்றும் அதனுடன் தென்மேற்கு அரேபிய கடல் நடுப்பகுதியில் வெப்பமண்டல மட்டங்கள் வரை பரவியுள்ளது. குறைந்த காற்றழுத்த பகுதி மே 29ல் உருவாக வாய்ப்பு உள்ளது. முதல் காற்றழுத்த பகுதி மும்பையை தாக்காது என்று தெரிவித்துள்ளது. ஆனால் அடுத்த 48 மணிநேரத்தில் கேரளாவில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது.

Recommended Video

    Tamilnadu Rain Update : 17 மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு
    தொடங்கியது மழைக்காலம்

    தொடங்கியது மழைக்காலம்

    வானிலை மையத்தின் அறிவிப்பின்படி இன்னும் ஒரு சில நாளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானால் புயல் சின்னமாக மாறி, கேரளாவில் ஜுன் முதல் நாளிலேயே மழை தொடங்க வாய்ப்பு உள்ளது. எனவே இனி இந்தியாவில் வரப்போகிறது தென்மேற்கு பருவ மழை. அடுத்த 4 மாதங்களுக்கு மழை காலம் தான் என்பதால் கொரோனா பிரச்னை குறையுமா காணாமல் போகுமா என்பது தெரிந்துவிடும்.

    English summary
    The India Meteorological Department (IMD) has warned that the cyclonic circulation is likely to develop over the Southwest Arabian sea and adjoining areas around May 31.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X