சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"முதலிரவிலேயே அப்செட்".. பகீரை கிளப்பி 3 பேரை சுட்ட ஜெயமாலா வழக்கில்.. மேலும் ஒருவரை தூக்கிய போலீஸ்

சவுகார்பேட்டை கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைதாகி உள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: "எனக்கு எதுக்கு நோயாளி புருஷனை கட்டி வச்சீங்க" என்று கேட்டு, சொத்துக்காக மாமனார் உட்பட 3 பேரை துப்பாக்கியாலேயே சுட்டு கொன்ற ஜெயமாலா வழக்கில் மேலும் ஒருவர் கைதாகி உள்ளார்!

சென்னை சவுகார்பேட்டையில் வசித்து வந்த தலீல் சந்த் - அவரது மனைவி புஷ்பாபாய் - மகன் ஷீத்தல்குமார் ஆகியோரை கடந்த நவம்பர் 11-ம்தேதி சுட்டுக் கொல்லப்பட்டனர்.

 Sowkarpet murder case issue, another one arrested by Chennai Police

இது குறித்து யானைகவுனி போலீசார் விசாரணை நடத்திய , 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, பல்வேறு கட்ட முயற்சிகளுக்கு பிறகு ஷீத்தலின் மனைவி ஜெயமாலா, ஜெயமாலாவின் சகோதரர்கள் கைலாஷ், விலாஷ், இவர்களது நண்பர்கள் ரபிந்தரநாத் கர், விஜய் உத்தம், ராஜு ஷின்டே, ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ராஜீவ் துபே, ஆகிய 7 பேரை கைது செய்தனர்.

விசாரணையில், ரூ.5 கோடி பணம் கேட்டு மிரட்டியதும், பணம் தரததால் ஷீத்தல் மற்றும் ஷீத்தலின் குடும்பத்தார்களை கொலை செய்ததும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.. மேலும் பாலியல் தொந்தரவு தனக்கு மாமியார் வீட்டில் இருந்ததாகவும் ஜெயமாலா வாக்குமூலம் தந்திருந்தார்... கைதானவர்களிடம் இருந்து 2 துப்பாக்கிகள், 2 கார்கள், 1 பைக், 6 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த கொலை வழக்கை பொறுத்தவரை, துப்பாக்கிகள்தான் மெயின் க்ளூவாக போலீசாருக்கு அமைந்தது.. கொலை சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்ட 2 துப்பாக்கிகளில் ஒரு துப்பாக்கி லைசென்ஸ் துப்பாக்கி ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ராஜூவ் துபேவுக்கு சொந்தமானது என்று தெரியவந்தது. ஆனால், அவருக்கு இந்த துப்பாக்கயை யார் சப்ளை செய்தது என்பதுதான் தெரியவில்லை.

அதனால் அதுகுறித்த விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில்தான் ஒருவர் கைதாகி உள்ளார். இவரும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்தானாம்.. பெயர் சந்திரதீப் சர்மா... இவர்தான் கைலாஷூக்கு துப்பாக்கியை தந்தவர்.. இவ்வளவு காலம் ராஜஸ்தானிலேயே தலைமறைவாக இருந்து வந்தார்.. ஆனால் போலீசார் அங்கேயே முகாமிட்டு இவரை தேடி வந்தநிலையில்தான் பிடிபட்டுள்ளார்.

இவரிடம் விசாரணை மேற்கொண்டதில், தான் ஒரு வக்கீல் என்பதால், கொலை மிரட்டல் வருவதாகவும், அதனாலேயே தற்காப்புக்காக கள்ள துப்பாக்கி வேண்டும் என்று சந்திரதீப் சர்மாவிடம் கைலாஷ் கேட்டாராம்.. ரூ. 25 ஆயிரத்திற்கு இந்த கள்ளத்துப்பாக்கியை வாங்கி, அதை ரூ.50 ஆயிரத்துக்கு கைலாஷிற்கு இவர் விற்றிருக்கிறார் என்பதும் தெரியவந்துள்ளது. இப்போது சந்திரதீப் சர்மா ஜெயிலில் உள்ளார்.. இன்னும் ஜெயமாலா வழக்கில் என்னென்ன மர்மங்கள் ஒளிந்து கொண்டிருக்கிறதோ தெரியவில்லை..!

English summary
Sowkarpet murder case issue, another one arrested by Chennai Police
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X