சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"நல்லகண்ணுவுக்கு கொரோனா இல்லை.. எஸ்பிபி தொடர்ந்து கவலைக்கிடம்".. விஜயபாஸ்கர் தகவல்

Google Oneindia Tamil News

சென்னை: அமைச்சர் விஜயபாஸ்கர், ஒரு நல்ல செய்தி, ஒரு வருத்தமான செய்தியை தெரிவித்துள்ளார்.. நல்லகண்ணுவுக்கு கொரோனா இல்லை என்று தெரிவித்த அமைச்சர், எஸ்பிபி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக கூறினார்.

Recommended Video

    கூட்டு பிரார்த்தனை | POLITICAL PARTIES PRAYING FOR SPB HEALTH | ONEINDIA TAMIL

    தமிழகத்தில் கடந்த சில தினங்களாகவே எஸ்பிபி உடல்நலம் குறித்த செய்திகள் அனைவரையும் கவலையில் ஆழ்த்தி வருகிறது.. கடந்த 12-ம் தேதி நைட்டில் இருந்தே அவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அவருக்கான பிரார்த்தனையில் ஒட்டுமொத்த தமிழகமும் தன்னை ஈடுபடுத்தி கொண்டும் வருகிறது.

     sp balasubrahmanyam health is in critical condition, minister vijayabaskar

    முன்னதாக, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட எம்பி வசந்தகுமாரும் அவரது மனைவியும் சென்னை அப்போலோ ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் உள்ளனர்.. இந்த சமயத்தில்தான் திடீரென நல்லகண்ணுவுக்கு உடம்பு சரியில்லை என்று தகவல் வரவும், தமிழகம் பதறிவிட்டது.

    உடனடியாக ராஜீவ் காந்தி ஆஸ்பத்திரியில் அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவருக்கு கொரோனா டெஸ்ட்டும் அங்கு எடுக்கப்பட்டது. இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசினார்.. அப்போது அவர் சொன்னதாவது:

    "எஸ்பி பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை கவலைக்கிடமாகவே தொடர்ந்து இருக்கிறது. டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் இருக்கிறார்... இதேபோல் வசந்தகுமார் எம்பிக்கும் தீவிரமான சிகிச்சை தரப்பட்டு வருகிறது... ஆனால் வசந்தகுமார் எம்பி உடல்நிலையும் கவலைக்கிடமாகத்தான் உள்ளது.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு இன்று காலை கொரோனா டெஸ்ட் செய்யப்பட்டது.. அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை... சளி மற்றும் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வரும், அவர் 5 நாட்கள் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று, அதன்பிறகே வீடு திரும்புவார்.

    "கவர்ன்மென்ட் ஆர்டரா".. தனியாளாக தெறிக்கவிட்ட செந்தில்குமார்.. ஆனால் நச்சுனு பதிலடி கொடுத்த முதல்வர்

    சென்னையில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள்தான் உள்ளது.. ஆனால், யாருக்கேனும் காய்ச்சல், இருமல் அறிகுறிகள் காணப்பட்ட உடனேயே சிகிச்சைக்கு வந்துவிட வேண்டும்.. நோயாளிகள் தாமதமாக வருவது தான் டாக்டர்களுக்கு பெரிய சவாலாக உள்ளது... மூச்சுத்திணறல், ஆக்சிஜன் அளவு குறைந்த பின் வந்தால் நோயாளிகளை காப்பாற்றுவதில் சிரமம்" என்றார்.

    English summary
    sp balasubrahmanyam health is in critical condition, minister vijayabaskar
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X