சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இசைக்கலைஞனை அரசு மரியாதையோடு அடக்கம் செய்ய முன் வந்த அரசுக்கு கோடான கோடி நன்றி - பாராதிராஜா

பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியத்திற்கு முழு அரசு மரியாதை அறிவித்த மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு தமிழக திரை உலகின் சார்பாக பாரதிராஜா நன்றி தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: விலைமதிப்பில்லாத அந்த இசைக் கலைஞனை அரசு மரியாதையோடு அடக்கம் செய்வது ஒன்று மட்டுமே அவருக்கு தருகின்ற சரியான அங்கீகாரமாக இருக்கும் என்பதை உணர்ந்து அதை செயல்படுத்த முன்வந்துள்ள முதல்வர் அவர்களுக்கு கலை உலகின் சார்பில் இசை ரசிகர்களின் சார்பில் கோடான கோடி நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியத்தின் உடல் இன்று தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

SP Balasubramaniam body respect Bharathiraja thanks to the TN CM

முதல்வரின் அறிவிப்புக்கு பாரதிராஜா நன்றி தெரிவித்துள்ளார். பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ் திரை ரசிகர்களை தன்னுடைய இனிய குரலால் இத்தனை ஆண்டுகாலம் தாலாட்டி கொண்டிருந்த எஸ் பி பாலசுப்பிரமணியம் இன்று மீளா தூக்கத்தில் ஆழ்ந்து விட்டார்.

ஒரு இசைக் கலைஞராக கணக்கிலடங்காத சாதனைகளைச் செய்துள்ள எஸ்.பி பாலசுப்ரமணியம் இதுவரை பாடிய மொத்தப் பாடல்களின் எண்ணிக்கை 45,000. அவர் பெற்ற தேசிய விருதுகள் ஆறு. இந்திய அரசின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ பத்மபூஷன் போன்ற விருதுகளை பெற்ற இசை மேதை அவர். இவை எல்லாவற்றிற்கும் மேலாக அவரிடம் இருந்த மாபெரும் சொத்து அவருடைய மனிதநேயம். எஸ் பி பாலசுப்பிரமணியத்தை எந்த இந்தியனும் ஒரு பாடகராக மட்டும் பார்த்ததில்லை

கண் எதிரே உன்னை காணும் வரம் மீண்டும் கிடைக்குமா? - எஸ்பிபிக்கு இளையராஜா இசை அஞ்சலி

இந்தியாவின் பெருமைக்குரிய விலைமதிப்பில்லாத சொத்தாகத் தான் பார்த்தார்கள். தமிழ் சினிமா உலகிற்கு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட எஸ்பி பால சுப்பிரமணியம் தென்னிந்தியாவின் நான்கு பெருமைக்குரிய முதல்வர்கள் ஆன கலைஞர், எம்ஜிஆர், என் டி ராமாராவ், ஜெயலலிதா ஆகிய நால்வரோடும் இணைந்து பணியாற்றுகின்ற வாய்ப்பினைப் பெற்றவர்.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் விடுத்துள்ள இரங்கல் செய்தி எஸ் பி பாலசுப்ரமணியம் எப்படிப்பட்ட உறவினை எல்லா தலைவர்களோடும் வைத்துக் கொண்டிருந்தார் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு.

விலைமதிப்பில்லாத அந்த இசைக் கலைஞனை அரசு மரியாதையோடு அடக்கம் செய்வது ஒன்று மட்டுமே அவருக்கு தருகின்ற சரியான அங்கீகாரமாக இருக்கும் என்பதை உணர்ந்து அதை செயல்படுத்த முன்வந்துள்ள முதல்வர் அவர்களுக்கு கலை உலகின் சார்பில் இசை ரசிகர்களின் சார்பில் கோடான கோடி நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்

நமது பாரதப் பிரதமரும் தமிழக தமிழக முதல்வரும் கலைத் துறையினர் மீது எந்த அளவு அன்பும் பாசமும் கொண்டிருக்கிறார்கள் என்பதை மொத்த கலை உலகமும் நன்கு அறியும். அதற்கு இன்னும் ஒரு எடுத்துக்காட்டு தான் தமிழக முதல்வரின் இந்த அறிவிப்பு எனக் குறிப்பிட்டுள்ளார் பாரதிராஜா.

English summary
Bharathiraja said that the Chief Minister, on behalf of the art world, would like to thank Koda Kodi on behalf of the art world for realizing that burying that precious musician with state honors would be the only proper recognition given to him.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X