சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாடல்கள் மூலம் மக்களின் மனத்துயரை ஆற்றிய பெருங்கலைஞர் எஸ்பிபி - சீமான் இரங்கல்

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் மறைவுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: கூவும் குயில்போல, தாலாட்டும் தாய்போல நம்மை தம் நாவால் வசப்படுத்திய தேன்குரலாளர், தனது பாடல்கள் மூலம் மக்களின் மனத்துயரை ஆற்றிய பெருங்கலைஞர் ஐயா பாலசுப்பிரமணியம் அவர்களை போற்ற வேண்டியது நமது கடமை என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் உடல்நலக்குறைவால் இன்று மரணமடைந்தார். அவரது மறைவுக்கு நாடு முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

SP Balasubramaniam died Seeman condolence

55 ஆண்டுகள் திரை இசையில் சுமார் 42 ஆயிரம் பாடல்கள், பல ஆயிரம் மேடைக் கச்சேரிகள் என ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளவர் எஸ்பி பாலசுப்ரமணியம். ஒரே நாளில் 19 பாடல்களை பாடிய சாதனை படைத்த இந்த பாடும் நிலா உடலால் இந்த மண்ணுலகை விட்டு மறைந்தாலும் இசையாக பாடலாக வாழ்ந்து கொண்டிருப்பார் என்று அனைவரும் புகழாரம் சூட்டி வருகின்றனர்.

கொரோனா பாடல்... வைரமுத்து எழுதியதை கடைசியாக பாடிய எஸ்.பி பாலசுப்ரமணியம் கொரோனா பாடல்... வைரமுத்து எழுதியதை கடைசியாக பாடிய எஸ்.பி பாலசுப்ரமணியம்

மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தில் மறைவுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இரங்கல் தெரிவித்துள்ளார்.

SP Balasubramaniam died Seeman condolence
SP Balasubramaniam died Seeman condolence

சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில், கூவும் குயில்போல, தாலாட்டும் தாய்போல நம்மை தம் நாவால் வசப்படுத்திய தேன்குரலாளர், தனது பாடல்கள் மூலம் மக்களின் மனத்துயரை ஆற்றிய பெருங்கலைஞர் ஐயா பாலசுப்பிரமணியம் அவர்களை போற்ற வேண்டியது நமது கடமை. அவரது இறுதிப்பயணத்தை அரசு மரியாதையோடு அனுப்பி வைப்பதே நமது பெருமை! என்று பதிவிட்டுள்ளார் சீமான்.

English summary
Naam Tamil Party co-ordinator Seeman said, It is our duty to pay homage to the great artist Aiya Balasubramaniam who touched the hearts of the people with his songs.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X