சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நீங்க அறிவியலில் ஆர்வம் கொண்டவரா.. உங்களுக்கு அவார்டு காத்திருக்கு.. இங்க வாங்க!

Google Oneindia Tamil News

சென்னை: பள்ளி மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையிலும், அறிவியல் குறித்த அவர்களது புரிந்துணர்வை அதிகரிக்கும் வகையிலும், அறிவியல் தொடர்பான ஆய்வுப் பணிகளுக்கு அவர்களை திரட்டிக் கொண்டு வரும் வகையிலும் இளம் விஞ்ஞானி விருது 2020 என்ற விருதை சென்னையைச் சேர்ந்த ஸ்பேஸ்கிட்ஸ் நிறுவனம் உருவாக்கியுள்ளது.

இதுதொடர்பான போட்டி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற்றது. தற்போது சென்னையில் இது நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொண்டு சென்னையைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் தங்களது அறிவியல் திறமையை வெளிப்படுத்த நல்லதொரு வாய்ப்பு கிடைத்துள்ளது.

Spacekidz Indias young scientist award 2020 completion

யார் யார் பங்கேற்கலாம்?

தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் மட்டுமே இதில் கலந்து கொள்ளலாம். 6 முதல் 12ம் வகுப்பு வரை படித்து வரும் மாணவர்கள் பங்கேற்கலாம்.

எப்போது போட்டி?

4, டிசம்பர் 2019.
இடம்: பாபுஜி நினைவு ஆசிரமம், மணப்பாக்கம், சென்னை.

எந்த நேரம்?

நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை.

குறிப்பு: தமிழ்நாட்டில் இதர பகுதிகளில் நடந்த போட்டிகளில் கலந்து கொள்ள முடியாமல் போன மாணவர்கள் தங்களது படைப்புகளை சென்னை கண்காட்சியில் வைக்கலாம். முற்றிலும் புதுமையான படைப்புகள் மகிழ்வுடன் வரவேற்கப்படுகின்றன.

இந்த போட்டியில் கலந்து கொள்ள ஆன்லைனில் பதிவு செய்வது கட்டாயம்.

ஆன்லைன் பதிவு செய்ய கீழ்க்காணும் இணைப்பை கிளிக் செய்து உள்ளே செல்லவும்.

இந்த போட்டியில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறும் மாணவர்களுக்கு ஸ்பேஸ்கிட்ஸ் இந்தியா நிறுவனத்தில் பயிற்சி எடுக்கும் வாய்ப்பு வழங்கப்படும். இதில் வெற்றி பெறும் மாணவர் அல்லது மாணவிக்கு நாசாவுக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். 2வது இடம் பெறும் மாணவர் அல்லது மாணவிக்கு ரஷ்ய விண்வெளி மையம் மற்றும் மலேசியாவுக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.

இதில் பங்கேற்கும் மாணவர்கள் தலா ஒரு படைப்பை மட்டுமே போட்டிக்கு சமர்ப்பிக்கலாம்.

மேலும் தொடர்புக்கு: 9912752744, 8328041317, 7708574647

இமெயில்: [email protected]

English summary
Chenna Spacekidz India has called young students to participate in the young scientist award 2020 completion.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X