சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சென்னைக்கு தரப்பட்ட அதே அலெர்ட்.. ஸ்பெனியில் 20 நிமிடத்தில் பெய்த 3 மாத மழை.. வல்லுநர்கள் வார்னிங்

Google Oneindia Tamil News

சென்னை: ஸ்பெனியில் இருக்கும் சிவில்லி என்ற பகுதியில் நேற்று முதல்நாள் பெய்த மழை காலநிலை மாற்றத்திற்கு எடுத்துக்காட்டாக மாறியுள்ளது. சென்னையில் எதிர்காலத்தில் பெரிய பெரிய வெள்ளம் வரலாம் என்று சுற்றுசூழல் வல்லுநர்கள் விடுத்த எச்சரிக்கைக்கு எடுத்துக்காட்டாக ஸ்பெயினில் ஏற்பட்ட இந்த வெள்ளம் பார்க்கப்படுகிறது.. அப்படி என்ன நடந்தது?

ஸ்பெயினில் இருக்கும் சிறிய நகரம்தான் சிவில்லி. இந்த நகரத்தில் நேற்று லேசான மழை பெய்யும் என்று வானிலை அறிவிப்பு வெளியானது. அதன்பின் மிக தீவிர கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை அறிக்கை மாற்றப்பட்டது. அதோடு மஞ்சள் அலெர்ட்டும் விடுக்கப்பட்டது.

சிவில்லி நகரத்தில் முதலில் லேசாகவே மழை பெய்தது. மழை பெய்ய தொடங்கி, 5 நிமிடத்தில் திடீரென மழையின் வேகம் அதிகரித்தது. அதோடு ஆலங்கட்டி மழையும் சேர்ந்து பெய்தது.

திடீரென மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொண்ட இளம்பெண்.. உண்மை காரணம் என்ன.. தி.மலை பரபரப்பு!திடீரென மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொண்ட இளம்பெண்.. உண்மை காரணம் என்ன.. தி.மலை பரபரப்பு!

லேசான மழை

லேசான மழை

ஆலங்கட்டி மழை என்றால் சிறிய சிறிய கட்டிகள் அல்ல. காரின் விண்ட் ஷீல்டை உடைக்கும் அளவிற்கு பெரிய பெரிய கட்டிகள். இதோடு இருபது நிமிடம் விடாமல் பேய் மழையும் பெய்தது. ஸ்பெயின் தனது வரலாற்றில் பார்க்காத மழையை அன்று பார்த்தது. சிவில்லி நகரம் முழுக்க இதனால் வெள்ளத்தில் மூழ்கியது. வீட்டு மொட்டை மாடியில் தண்ணீர் தேங்கி, அந்த தண்ணீர், மாடியை உடைத்துக்கொண்டு வெளியே வந்தது.

சாலையில் பெய்தது

சாலையில் பெய்தது

அனைத்து சாலைகளும், முதல் தளத்தில் இருக்கும் வீடுகளும் வெள்ளத்தில் மூழ்கியது. இதெல்லாம் வெறும் 20நிமிட மழையால் ஏற்பட்டது. ஆம், வெறும் 20 நிமிடத்தில் அங்கு மூன்று மாதத்தில் பெய்ய வேண்டிய மழை பெய்துள்ளது . மேக வெடிப்பு என்று கூறுவார்களே அப்படி மொத்தமாக மேகம் வெடித்து மழை பெய்து உள்ளது. யாரும் கணிக்க முடியாத படி, ரெட் அலெர்ட் கொடுக்காமலே அங்கு இப்படி ஒரு மழை பெய்துள்ளது.

சென்னை வெள்ளம்

சென்னை வெள்ளம்

சென்னையிலும், கேரளாவிலும் ஏற்பட்ட வெள்ளம் போலவே இங்கும் பெரிய வெள்ளம் ஏற்பட்டுள்ளது. சாலைகள், வீடுகள் இப்போதும் நீரில் மிதந்து வருகிறது. அங்கு மீட்பு பணிகள் செய்வது கஷ்டமாக இருக்கிறது. எந்த அணைகளும் நிரம்பாமல், உடையாமல், தானாக வெறும் மழை மூலமே இவ்வளவு பெரிய வெள்ளம் ஸ்பெயினில் ஏற்பட்டுள்ளது. இங்குதான் காலநிலை மாற்றம் குறித்து வானிலை வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள்.

என்ன சொன்னார்கள்

என்ன சொன்னார்கள்

ஸ்பெயினில் இப்படி தீவிர மழை பெய்யும், வெள்ளம் வரும் என்று வானிலை வல்லுநர்கள் முன்பே கணித்து இருக்கிறார்கள். 2020க்கு பின் இப்படி அடிக்கடி வெள்ளம் ஏற்படலாம். ஸ்பெயின் நாட்டின் வெப்பநிலை, காற்று அழுத்தம், ஈரப்பதம் எதுவுமே சரியில்லை. எல்லாம் மாறிவிட்டது. இதனால் மழையை கணிப்பது கடினம்.எதிர்பார்க்காத நேரத்தில், மிக தீவிர கனமழை பெய்து வெள்ளம் ஏற்படலாம் என்று முன்பே ஸ்பெயின் வானிலையை வல்லுநர்கள் எச்சரித்து உள்ளனர்.

எதிர்பார்க்காத நாளில்

எதிர்பார்க்காத நாளில்

அவர்கள் எச்சரித்தது போலவே எதிர்பார்க்காத நாளில் ஸ்பெயினில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் எதிர்காலத்தில் பெரிய பெரிய வெள்ளம் வரலாம் என்று சுற்றுசூழல் வல்லுநர்கள் விடுத்த எச்சரிக்கைக்கு எடுத்துக்காட்டாக ஸ்பெயினில் ஏற்பட்ட இந்த வெள்ளம் பார்க்கப்படுகிறது.. ஆம் ஸ்பெயினுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது போலவே சென்னைக்கும் இதேபோல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

வெள்ளம் சென்னையை

வெள்ளம் சென்னையை

சென்னையில் நவம்பர் மாதம் 2018ல் பெரிய வெள்ளம் ஏற்பட்டது. இந்த நிலையில் இதேபோல், ஆனால் இதை விட பெரிய அளவில் சென்னையில் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று சென்னை ஐஐடி ஆராய்ச்சி தெரிவித்து உள்ளது. சென்னையில் அதிகரித்து வரும் கார்பன் வெளியீடு காரணமாக சென்னையில் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு மழை பெய்யும் என்று அந்த ஆராய்ச்சியில் கூறப்பட்டுள்ளது.

மழை பெய்யும்

மழை பெய்யும்

வானிலையில் ஏற்படும் மாற்றம், வெப்பநிலை மாற்றம் மற்றும் ஈரப்பத மாற்றம் காரணமாக சென்னையில் அதிக அளவிற்கு முறையற்ற ரீதியில் மழை பெய்யும். இதனால் வெள்ளம் ஏற்படும் என்று ஐஐடி தெரிவித்துள்ளது. 50 வருடங்களில் இப்படி ஒரு பெரிய வெள்ளத்தை சென்னை சந்திக்கும் என்று இந்த ஆய்வு கூறியுள்ளது. சென்னையில் பெய்யும் சராசரி மழையின் அளவு ஒவ்வொரு வருடமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்று இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

இதே எச்ச்சரிக்க

இதே எச்ச்சரிக்க

ஸ்பெயினுக்கும் இதேபோல்தான் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அங்கு மழை அளவு எதிர்பார்க்க முடியாத அளவிற்கு அதிகரிக்கும் என்று கூறினார்கள். அதேபோல் ஸ்பெயினில் நேற்று முதல் நாள் மழை பெய்தது. இதுதான் வானிலை வல்லுநர்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் இப்போதே வானிலை குறித்தும் சுற்றுசூழல் குறித்தும் அக்கறையோடு, அதற்கான திட்டங்களை வகுக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்!

English summary
Spain faces a massive rain like how Chennai faced in 2015 flood.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X