சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பெட்டியில் உறங்கவில்லை எஸ்பிபி... மண்ணுக்குள் புதைந்தார்... விண்ணுக்கு பாடல்!!

Google Oneindia Tamil News

சென்னை: பிரபலங்கள் இறந்தால் அவர்களை பெட்டியில் வைத்து புதைப்பதுதான் வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால், எவ்வளவு புகழின் உச்சியில் இருந்தாலும், மண்ணுக்குத்தான் உடல் என்பதை தனது இறப்பிலும் காட்டி இருக்கிறார். எஸ்பிபி.

பிரபல பாடகர் எஸ்பிபியின் இறப்பை யாராலும் சமாதானம் செய்து கொள்ள முடியவில்லை. அவரது பூத உடல் மண்ணில் புதைந்தாலும் அவர் விட்டுச் சென்ற இனிய குரலில் அமைந்த பாடல்கள் நூற்றாண்டுகளுக்கும் மக்களை தாலாட்டும் என்பதில் சந்தேகமில்லை.

 SPB buried in the soil not putting him in the box

அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள், பொருளாதாரத்தில் உயர்ந்தவர்கள் என்று இறந்தால் அவர்களது உடலை மரப்பெட்டியில் வைத்து மண்ணில் புதைப்பார்கள் சந்தனப் பெட்டியும் பயன்படுத்துவார்கள். ஆனால். இன்று புதைக்கப்பட்ட எஸ்பிபியின் உடல் மண்ணில் வைத்து மூடப்பட்டது. இந்துக்களின் முறைப்படி அனைத்து வேத மந்திரங்களும் முழங்க இறுதிச் சடங்கு நடந்தது. அவரது மகன் இறுதிச் சடங்கு நடத்தினார்.

 SPB buried in the soil not putting him in the box
 SPB buried in the soil not putting him in the box

தனது பாடலில், ''நடந்தால் இரண்டடி, இருந்தால் நான்கடி, இறந்தால் ஆறடி'' என்று எஸ்பிபி பாடியிருப்பார். இது அவரை இன்று நினைவூட்டுகிறது. அவர் பாடிய ஒவ்வொரு பாடல்களும் இன்று அவருக்கு பொருந்தியது போல் மனம் கனக்கிறது. அனைவரும் கேட்பது போல அவர் பாரத் ரத்னா விருது பெறுவதற்கு தகுதியானவர்தான். இதில் எந்த மாற்றமும் இல்லை.

 72 குண்டுகள் முழங்க.. அரசு மரியாதையுடன் நல்லடக்கம்.. சங்கீத மேகத்தோடு கலந்த எஸ்பி. பாலசுப்பிரமணியன் 72 குண்டுகள் முழங்க.. அரசு மரியாதையுடன் நல்லடக்கம்.. சங்கீத மேகத்தோடு கலந்த எஸ்பி. பாலசுப்பிரமணியன்

English summary
SPB buried in the soil not putting him in the box
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X