சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இனியும் தப்பு செய்யாம இருந்தா தான் சபாநாயகர் தனபாலுக்கு நல்லது.. ஆர்.எஸ்.பாரதி பேட்டி

Google Oneindia Tamil News

சென்னை: சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது சபாநாயகரின் தவறான அணுகுமுறை என்பதையே உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியிருப்பதாக, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளாா்.

இது குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த அவர், உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு பிறகாவது சபாநாயகர் இனி ஒருமுறை இவ்விவகாரத்தில் தவறு செய்யாமல் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் அவருக்கு நல்லது என ஆர்.எஸ்.பாரதி கூறினார்.

Speakers approach is wrong said by supreme court order.. Dmk opinion

டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மூவருக்கு சபாநாயகர் அனுப்பிய நோட்டீசுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும் எம்.எல்.ஏ.க்கள் மூவருக்கு நோட்டீஸ் அனுப்பியது தொடர்பாக சபாநாயகர் தனபால் விளக்கம் அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கு திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில் உச்சநீதிமன்றம் விதித்துள்ள இடைக்கால தடை குறித்து கருத்து தெரிவித்த மூன்று எம்எல்ஏக்களில் ஒருவரான ரத்தனசபாபதி, உச்சநீதிமன்ற உத்தரவு மூலம் நீதி வென்றுள்ளது.

ஒன்றரை நிமிடத்துக்குள் விசாரணை.. சபாநாயகர் நோட்டீஸுக்கு இடைக்கால தடை.. உச்சநீதிமன்றம் அதிரடிஒன்றரை நிமிடத்துக்குள் விசாரணை.. சபாநாயகர் நோட்டீஸுக்கு இடைக்கால தடை.. உச்சநீதிமன்றம் அதிரடி

சபாநாயகரின் நோட்டீசுக்கு பதில் அளிப்பது பற்றி வழக்கறிஞருடன் பேசி முடிவு எடுக்கப்படும் என கூறினார். சபாநாயகர் நோட்டீஸ் அளித்ததற்கு எதிராக எம்.எல்.ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது

English summary
DMK secretary general, RS Bharathi has said that the Supreme Court had pointed out that the misuse of the Speaker was a warning to the legislators.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X