10 வயசு சிறுமி.. மிரட்டி மிரட்டியே பாலியல் தொல்லை.. சப் இன்ஸ்பெக்டர் போக்சோவில் கைது

சென்னை: யூனிபார்மில் கையில் துப்பாக்கியுடன் விறைப்பாக நிற்கும் இவர்தான் 10 பெண் குழந்தையை நாசம் செய்தவர்.
சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்தவர் வாசு. மாதவரம் பால் பண்ணை போலீஸ் ஸ்டேஷனில் சப்- இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.
வில்லிவாக்கம் ஜகநாதபுரம் பகுதியில்தான் குடியிருக்கிறார். இவர், நேற்று முன்தினம் தன் வீட்டு பக்கத்தில் தெருவில் 10 வயது சிறுமி விளையாடி கொண்டிருந்தார்.

அலறிய குழந்தை
உடனே அருகில் சென்று அந்த குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை செய்ய ஆரம்பித்துள்ளார். அந்த குழந்தையோ கத்தி அலறி உள்ளது. இதனால் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் எல்லாம் ஓடிவந்தார்கள். ஆனால் அதற்குள் வாசு எஸ்கேப் ஆகி ஓட தொடங்கினார்.

சரமாரியாக அடித்தனர்
அதற்குள் என்ன நடந்தது என்று பொதுமக்கள் குழந்தையிடம் கேட்ட, அவளும் நடந்ததை கூற, ஆத்திரமும் அதிர்ச்சியும் அடைந்த மக்கள் இன்ஸ்பெக்டரை பின்னாலேயே துரத்தி கொண்டு ஓடினார்கள். பிறகு விரட்டி பிடித்து சரமாரியாக அடிக்க ஆரம்பித்தார்கள். இறுதியாக வில்லிவாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.

உயரதிகாரிகள் நடவடிக்கை
இன்ஸ்பெக்டர்மீது புகார் சொல்லி அவரை பிடித்து கொண்டு ஸ்டேஷன் வரவும் போலீசார் புகார் எதுவுமே மக்களிடம் வாங்கவில்லை. வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. உடனே இது சம்பந்தமாக உயர்அதிகாரிகளின் கவனத்துக்கு விஷயம் போனது.

4 மாதமாக தொல்லை
பின்னர் உடனடியாக பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க உத்தரவிடப்பட்டது. அப்போது காவல் நிலைய குழந்தைகள் நல அலுவலர் மூலம் விசாரணை நடத்தியதில் இன்னொரு பகீர் வெளிச்சத்துக்கு வந்தது. இந்த இன்ஸ்பெக்டர் சிறுமியை இப்படித்தான் 4 மாசமாக மிரட்டி மிரட்டியே பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் என தெரியவந்தது.

போக்சோ பாய்ந்தது
இதையடுத்து இன்ஸ்பெக்டரிமே நேரடி விசாரணை நடந்தது. கடைசியில் எல்லா தப்பையும் இன்ஸ்பெக்டர் ஒப்புக் கொண்டார். இதையடுத்து போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து இன்ஸ்பெக்டரை கைது செய்தனர்.

பணி ஓய்வு
இந்த இன்ஸ்பெக்டருக்கு 57 வயசாகிறது. அடுத்த வருஷம் ரிடையர் ஆக போறார். இந்த லட்சணத்தில் இப்படி ஒரு கேவலத்தை செய்த சம்பவம் எல்லோருக்குமே பெரும் அதிர்ச்சியைதான் ஏற்படுத்தி உள்ளது.