சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா.. அதுவும் பஸ்லயா.. அப்ப மொதல்ல இத படிங்க!

Google Oneindia Tamil News

சென்னை: தீபாவளி பண்டிகைக்காக தமிழகத்தில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள் எந்தெந்த பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படுகிறது என்பதை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

வரும் செவ்வாய்க்கிழமை நாடு முழுவதும் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனால் பணி நிமித்தமாகவும் படிப்பிற்காகவும் சொந்த ஊரை விட்டு சென்னையில் தங்கியுள்ளவர்கள் தீபாவளிக்கு ஊருக்கு செல்வது வழக்கம்.

Special buses ply from these places to those places

இதனால் வழக்கமாக இருக்கும் பேருந்துகளை வைத்து இந்த கூட்டத்தை சமாளிக்க முடியாது. எனவே ஆண்டுதோறும் பொங்கல், தீபாவளி பண்டிகைகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம்.

அந்த வகையில் இந்த ஆண்டும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வழக்கமான பேருந்துகள்+ சிறப்பு பேருந்துகளை இயக்குவதால் பேருந்து வெளியே வருவதற்கே 2 மணி நேரம் ஆகிவிடுகிறது.

இதுமட்டுமல்லாமல் மற்ற வாகனங்களால் டிராபிக் ஜாம் ஆகிறது. இதை தடுக்க கடந்த சில ஆண்டுகளாக பண்டிகை காலத்தின் போது பேருந்துகளை பிரித்து பல்வேறு பேருந்து நிலையம் மூலம் இயக்கப்படுகிறது.

அந்த வகையில் எந்தெந்த ஊருக்கு எங்கிருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்பதை பார்ப்போம்.

  • மாதவரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஆந்திரா மார்க்கமாக செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகிறது.
  • கே கே நகர் பேருந்து நிலையத்திலிருந்து ஈசிஆர் மார்க்கமாக புதுவை, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
  • தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
  • பூந்தமல்லி பேருந்து நிலையத்திலிருந்து காஞ்சிபுரம், செய்யார், வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர் மற்றும் ஓசூருக்கு செல்லும் பேருந்துகள் இயக்கம்.
  • கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து மேற்குறிப்பிட்டுள்ள ஊர்களை தவிர பிற ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

English summary
Special buses ply from particular bus stops to certain places. TN operates special buses for deepavali.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X