சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தீபாவளி பண்டிகை.. சென்னையில் 5 இடங்களில் சிறப்பு பேருந்து.. போக்குவரத்துத் துறை அமைச்சர்

Google Oneindia Tamil News

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் 5 இடங்களில் சிறப்பு பேருந்து இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் அக்டோபர் மாதம் 27-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி சென்னையிலிருந்து மற்ற ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகளை இயக்குவது குறித்து போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

Special buses will ply from Chennai, says M.R.Vijayabaskar

அவர் கூறுகையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. பொதுமக்கள் இடையூறு இல்லாமல் சொந்த ஊர்களுக்கு சென்று வர சென்னையில் 5 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் உருவாக்கப்படும்.

தேனி மருத்துவக் கல்லூரியின் சென்ணை மாணவர் உதித் சூர்யா ஆள்மாறாட்டம் செய்தது உறுதி.. கல்லூரி டீன்தேனி மருத்துவக் கல்லூரியின் சென்ணை மாணவர் உதித் சூர்யா ஆள்மாறாட்டம் செய்தது உறுதி.. கல்லூரி டீன்

அந்த 5 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் வெளி மாவட்டங்களுக்கு புறப்பட்டு செல்லும். மாதவரத்தில் அமைக்கப்படும் சிறப்பு பேருந்து நிலையத்தில் இருந்து ஆந்திரத்துக்கு பஸ்கள் இயக்கப்படும். பூந்தமல்லியிலிருந்து வேலூர், ஆரணி, சேலம் ஆகிய பகுதிகளுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.

தாம்பரம் மெப்ஸ் பகுதியில் இருந்து தஞ்சை, கும்பகோணத்துக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. கோயம்பேட்டிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். இதற்கான முன்பதிவு அடுத்த மாதம் 23-ஆம் தேதி தொடங்கும். தீபாவளி பண்டிகை அன்றும் முன்பதிவு செய்யப்படும் என்றார்.

English summary
Transport department minister M.R. Vijayabaskar says that special buses will ply to different places from temporary busstands.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X