சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆதார் + மின் இணைப்பு.. உடனே கிளம்புங்க மக்களே.. தமிழகம் முழுவதும் இன்று முதல் ஸ்பெஷல் முகாம்..!

மின் இணைப்புடன் ஆதார் நம்பர் இணைப்பதற்கான சிறப்பு முகாம்கள் இன்று முதல் நடக்கிறது

Google Oneindia Tamil News

சென்னை: மின் இணைப்பை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்காக இன்று முதல் தமிழகத்தில் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

தமிழகத்தில் மின் இணைப்புடன், ஆதார் நம்பரையும் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது... தமிழகம் முழுவதும் 2 கோடியே 30 லட்சம் வீட்டு மின் இணைப்புகள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன.. இதுதவிர 22 லட்சம் விவசாய மின் இணைப்புகளும், 11 லட்சம் குடிசை மின் இணைப்புகளும் உள்ளன.

இந்நிலையில் மின் இணைப்புகளுடன் ஆதார் நம்பரையும் சேர்த்து இணைத்தால்தான், கரண்ட் பில் கட்ட முடியும் என்ற அறிவிப்பு வெளியானது.. எனவே, மின் இணைப்புடன், ஆதார் நம்பரையும் இணைக்கும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

மின் இணைப்புடன் ஆதார் எண்! டாஸ்மாக் கடைகளில் மது வாங்க அரசு ஆதாரை ஏன் கட்டாயமாக்கவில்லை? மநீம கேள்விமின் இணைப்புடன் ஆதார் எண்! டாஸ்மாக் கடைகளில் மது வாங்க அரசு ஆதாரை ஏன் கட்டாயமாக்கவில்லை? மநீம கேள்வி

 கரண்ட் பில்

கரண்ட் பில்

இண்டர் நெட் மையங்களில், ஆதார் நம்பரை இணைப்பதற்கான பணிகள் செய்து தரப்படுகிறது என்பதால், பொதுமக்கள், நெட் சென்டரை தேடிச்சென்று இணைத்து வருகிறார்கள்... அதேபோல, வெப்சைட்கள் மூலமாகவும் நம்பரை இணைத்து விட முடிகிறது.. ஆதார் எண்ணை இணைத்தவுடன், அந்தந்த போன்களுக்கு மெசேஜ் வந்துவிடும்... நம்பரை இணைப்பது எளிது என்றாலும், பலபேரால் அந்த பணியை எளிதாக செய்ய முடிவதில்லை.. அதனால், இதனை கருத்தில் கொண்டு தமிழக மின்சார வாரியம் சிறப்பு முகாம்களை நடத்துவதற்கு முடிவு செய்து அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.

 ஸ்பெஷல் கேம்ப்

ஸ்பெஷல் கேம்ப்

இது தொடர்பாக அமைச்சர் செந்தில்பாலாஜி ஒரு அறிக்கையும் வெளியிட்டிருந்தார்.. அதில் இன்று முதல் அதாவது 28-ந்தேதி முதல் மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதற்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்படுவதாகவும், இந்த முகாம்கள் வரும் டிசம்பர் 31-ந்தேதி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது... அதுவரை ஏற்கனவே உள்ள நடைமுறை படியே மின் கட்டணத்தை செலுத்தலாம் என்றும் கூறப்பட்டுள்ளது...

 ஞாயிற்றுக்கிழமை

ஞாயிற்றுக்கிழமை

தமிழகம் முழுவதிலும் உள்ள 2,811 மின் வாரிய பிரிவு அலுவலகங்களில் இந்த முகாம்களை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தேவையான பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பண்டிகை நாட்களை தவிர்த்து அனைத்து நாட்களிலும் இணைப்பு முகாம்களை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. வார இறுதி விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையிலும் முகாம்கள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று முதல் முகாம் நடக்க உள்ளது.. காலை 10 மணி முதல் மாலை 5.15 மணி வரை மின்கட்டண அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.

கவுண்ட்டர்கள்

கவுண்ட்டர்கள்

இதற்காக, 2,811 மின்வாரிய பிரிவு மையங்களிலும் சிறப்பு கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் தங்களது மின் பயனீட்டு அட்டை மற்றும் ஆதார் அட்டையை நேரடியாக கொண்டு சென்று, இணைத்துக் கொள்ளலாம். அரசு விடுமுறைகளை தவிர்த்து அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் காலை 10.30 மணி முதல் மாலை 5.15 மணி வரை சிறப்பு முகாம்கள் செயல்படும். இந்த சிறப்பு முகாம் மூலம் ஆதாரை இணைக்க 34 நாட்கள் அவகாசம் கிடைத்துள்ளது மக்களுக்கு நிம்மதியை தந்து வருகிறது...

English summary
Special camp to link Aadhaar number with EB from today: TN EB
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X