சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இது தொடக்கம்தான்.. இன்னும் நிறைய இருக்கு.. கலாம் சாட் மூலம் கலக்கிய ஸ்ரீமதி கேசன் சிறப்பு பேட்டி!

கலாம் சாட்டை விண்வெளிக்கு வெற்றிகரமாக அனுப்பியதன் மூலம் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனம் இந்தியாவில் குறிப்பிடத்தகுந்த ஸ்பேஸ் ஆராய்ச்சி நிறுவனமாக மாறியுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Kalamsat: தமிழக மாணவர்கள் உருவாக்கிய கலாம் சாட் விண்ணில் ஏவப்பட்டது

    சென்னை: கலாம் சாட்டை விண்வெளிக்கு வெற்றிகரமாக அனுப்பியதன் மூலம் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனம் இந்தியாவில் குறிப்பிடத்தகுந்த ஸ்பேஸ் ஆராய்ச்சி நிறுவனமாக மாறியுள்ளது.

    உலகம் முழுக்க ஸ்பேஸ் தொடர்பான ஆராய்ச்சிகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. விண்வெளி குறித்த ஆராய்ச்சிகளுக்கு அந்த அளவிற்கு முக்கியத்துவமும், எதிர்காலமும் கூடிக்கொண்டே வருகிறது. முக்கியமாக அமெரிக்காவும், சீனாவும் இதில் மிக தீவிரமாக பணியாற்றி வருகிறது.

    உலகம் முழுக்க நாசா மட்டுமில்லாமல் எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ், ஜெப் பெசோசின் ப்ளூ ஆர்ஜின் ஆகிய நிறுவனங்களும் மிக முக்கிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்களாக வலம் வருகிறது. இந்தியாவில் இஸ்ரோ எப்போதும் போல கெத்து காட்டிக் கொண்டு இருக்கிறது.

    இந்த நிலையில்தான் ''வந்தா ராஜாவாத்தான் வருவேன்'' என்று இந்தியாவில் இருந்து புதிய பாய்ச்சலுடன் உருவாகி இருக்கும் நிறுவனம்தான் ''ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா (space kidz india)'' நிறுவனம். இந்த நிறுவனம் சார்பாக அனுப்பப்பட்ட கலாம் சாட்தான் தற்போதையை டிரெண்டிங் ஸ்டோரி. கல்லுரி மாணவர்களின் குழு இந்த சாதனையை செய்துள்ளது. இஸ்ரோ மூலம் நேற்று இரவு இது வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

    இந்த சாட்டிலைட் எப்படி உருவாக்கப்பட்டது.. இதன் பின்பான கதை என்ன.. அட யார் பாஸ் இந்த ஸ்பேஸ் கிட்ஸ் என்று தெரிந்து கொள்ள ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியாவின் நிறுவனர் டாக்டர். ஸ்ரீமதி கேசனிடம் பேசினோம், வந்த பதில்கள் அனைத்தும் ''அட போட'' வைக்கும் ஆச்சர்ய பதில்கள்!

    எப்படி ஃபீல் பண்ணுறீங்க?

    கலாம் சாட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டு இருக்கு. காலையில் இருந்து நிறைய பேர் வாழ்த்து சொல்லிக்கிட்டே இருக்காங்க. சரியா சொல்லனும்னா வாழ்த்து மழையில் நனைந்து கொண்டு இருக்கோம். பிரதமர் மோடி கூட எங்களை வாழ்த்தி டிவிட் செய்து இருக்காங்க. இஸ்ரோவில் எப்போதும் போல எல்லோரும் சந்தோசமா வாழ்த்துனாங்க.

    கதை

    கதை

    கலாம் சாட் உருவானதிற்கு பின் நிறைய பேரோட உழைப்பு இருக்கு. இந்தியாவிலையும் இது சாத்தியம்னு நாங்க இப்போ நிரூபிச்சி இருக்கோம். முன்னாடிலாம் இந்தியாவில் விண்வெளி துறைக்கு எதிர்காலம் இருக்குமான்னு நினைப்பாங்க. நாங்க இப்போ அதை உடைச்சி இருக்கோம். கலாம் சாட் மூலமாக மக்களுக்கு இந்த துறை பற்றி தெரிய வந்திருக்கு.

    குட்டி டீம்

    எங்கள் டீம்ல இருக்குற எல்லோரும் ரொம்ப குட்டி பசங்கதான். எல்லோரும் படிப்பிஸ்ட்ன்னு நினைக்க வேண்டாம். எல்லாம் ரொம்ப ஜாலி டைப். எங்க டீம்ல விஜயலக்ஷ்மி நாராயணன்னு ஒருத்தர் இருக்காங்க.. அவங்கதான் ரொம்ப படிக்கிற பையன். ஆனா எல்லோரும் வித்தியாசமாக யோசிக்க கூடியவங்க. ரொம்ப திறமையான பசங்க. அதனால்தான் கலாம் சாட் உருவாக்க முடிஞ்சது.

    சாத்தியம்

    சாத்தியம்

    இதுக்கு முன்னாடியே நாங்க சாட்டிலைட் தொடர்பா நிறைய ஆராய்ச்சி பண்ணினோம். இதுவரை 5 பலூன் சாட்டிலைட் அனுப்பி இருக்கோம். நாசாவிற்கு சாட்டிலைட் பண்ணி கொடுத்திருக்கோம். நிறைய தனியார் நிறுவனங்களுக்கு சாட்டிலைட் உருவாக்கி கொடுத்து இருக்கோம். அந்த அனுபவம்தான் இந்த சாட்டிலைட்டை சரியாக உருவாக்க உதவியது.

    பசங்க

    பசங்க

    எங்க குருப்ல கோர் டீம்ல 7 பேர் இருக்காங்க. ரிபாத் ஷாருக்தான் ஹெட், அவர்தான் டீம்லயும் ரொம்ப சின்ன பையன். அதேபோல் யக்னசாய், வினய் பரத்வாஜ், விஜயலக்ஷ்மி நாராயணன், அப்துல் காசிப், திவேதி அப்பறம் நான் இதுதான் கோர் டீம். அதே போல இன்னும் 8 பேர் சப்போர்டிங் டீம்ல இருக்காங்க. சஞ்சய், மோனிஷ், மவ்னிஷ் இவங்க எல்லாம் இந்த கலாம் சாட்டிற்கு பெரிய பக்க பலமா இருந்தாங்க.

    அதிசயம்

    அதிசயம்

    இந்த சாட்டிலைட்டை நாங்க அப்படியே உருவாக்கிட வில்லை. ஒரு 6 வருடம் இதற்காக கஷ்டப்பட்டோம். நிறைய ரிசர்ச் பண்ணினோம். கொஞ்சம் கொஞ்சமாக நிறைய அனுபவத்தை வளர்த்துக்கிட்டு இப்போ இதை உருவாக்கி இருக்கோம். இதை உருவாக்க 6 மணி நேரம்தான் எங்களுக்கு ஆனது. அதற்கு முன்னாடி சேகரிச்ச அனுபவம்தான் அதற்கு காரணம்.

    செலவு

    செலவு

    எங்களுக்கு இதை உருவாக்க 12 லட்சம் வரை ஆனது. பணம்தான் கொஞ்ச பிரச்சனையா இருக்கும். பெரும்பாலும் என்னுடைய சொந்த செலவுதான். சில திட்டங்களுக்கு ஹெக்ஸாவேர் நிறுவனம் (Hexaware) ஸ்பென்ஸர் பண்ணி இருக்காங்க. பல சமயங்கள்ல வெறியோடு வேலை செய்யுறதால் காசு பார்க்க மாட்டோம். இந்த திட்டம் உருவாக இஸ்ரோ நிறைய உதவி பண்ணது. இஸ்ரோவில் இருக்குற எல்லோரும் நிறைய விஷயம் கற்றுக்கொடுத்தாங்க.

     சூப்பர் பாய்ஸ்

    சூப்பர் பாய்ஸ்

    இந்த பசங்க எல்லாம் எட்டாவது படிக்கிற காலத்துல இருந்து என் கூட இருக்காங்க. அவங்களுக்கு இதுதான் எதிர்காலம். நான் போக சொன்னா கூட வேற எங்கயும் போக மாட்டாங்க. ஒரு கோடி ரூபாய் கொடுத்தா கூட அவங்க இங்கதான் ஸ்பேஸ் ரிசர்ச் பண்ணுவாங்க. அந்த அளவிற்கு துடிப்பான பசங்க இவங்க எல்லாம். எங்க குரூப்ல இருந்து ஒருவர் எதிர்காலத்துல விண்வெளிக்கு செல்வார்.

    அடுத்த திட்டம்

    இப்போது விக்ரம்சாட் என்று ஒரு சாட்டிலைட் உருவாக்கிட்டு இருக்கோம். இது விண்வெளியில் இந்தியர்கள் எப்படி இருக்குறது என்பதை ஆராய்ச்சி செய்ய உதவ கூடியது. விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் இஸ்ரோவின் திட்டத்திற்கு இது உதவும். அவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவ விருப்பப்பட்டு இந்த திட்டத்தை கையில் எடுத்து இருக்கோம். இது இந்திய விண்வெளி துறைக்கு பெரிய உதவியா இருக்கும்.

     நிலவுக்கு போகணும்

    நிலவுக்கு போகணும்

    எங்களுக்கு நிலவிற்கு போகுறதுதான் ஆசை. அது விரைவில் நடக்கும்.. ஒருநாள் இந்தியர் ஒருவர் நிலவிற்கு போவார். முழுக்கு முழுக்க இந்திய தொழில்நுட்பத்துல உருவான ராக்கெட் மூலம். அப்போது உலகம் இந்தியாவை திரும்பி பார்க்கும் .. கண்டிப்பா இது நடக்கும் என்று ஆசைகள், கனவுகளுடன் பேசுகிறார் ஸ்ரீமதி கேசன். ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனம் விண்வெளி துறையில் படைக்க போகும் சாதனைக்கு பெரும் தொடக்க புள்ளியாக கலாம் சாட் அமைந்து இருக்கிறது என்றுதான் கூற வேண்டும்.

    English summary
    Special interview founder of space kidz india, Dr. Srimathy Kesan after the KalamSat success.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X