சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சூப்பர்.. வரும் 12ம் தேதி முதல் செங்கல்பட்டில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கம்

Google Oneindia Tamil News

சென்னை: வரும் 12ம் தேதி முதல் சென்னை அருகே செங்கல்பட்டு, அரக்கோணத்தில் இருந்து முக்கிய ரயில்களை இயக்க ரயில்வே துறை ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் வேலைக்கு செல்வோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Recommended Video

    வரும் 12ம் தேதி முதல் செங்கல்பட்டில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கம்

    மதுரை -விழுப்புரம் இடையே இண்டர்சிட்டி அதிவிரைவு ரயில் தினமும் இரு மார்க்கத்திலும் இயக்கப்படுகிறது. இதேபோல் காட்பாடி மற்றும் கோவை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இது தவிர திருச்சி -நாகர்கோவில், கோவை -மயிலாடுதுறை வழித்தடத்திலும் ரயில்கள் இயக்கப்படுகிறது.

    special trains to operate from Chengalpattu on 12th june

    இந்நிலையில் திருச்சி - செங்கல்பட்டு - திருச்சி (சூப்பர் பாஸ்ட் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்), அரக்கோணம் - கோவை -அரக்கோணம் (சூப்பர் பாஸ்ட் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்), திருச்சி - செங்கல்பட்டு -தஞ்சை மாயவரம், விழுப்புரம் வழியாக (சூப்பர் பாஸ்ட் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்) உள்ளிட்ட 3 ரயில்களை இயக்க தமிழக அரசு தெற்கு ரயில்வேக்கு கோரிக்கை விடுத்திருந்தது.

    இதனையடுத்து தெற்கு ரயில்வே சார்பில் மத்திய ரயில்வே அமைச்சகத்திற்கு ஒப்புதல் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டது. இந்நிலையில் திருச்சி - செங்கல்பட்டு வழித்தடத்தில் இரண்டு ரயில்களும், அரக்கோணம் - கோவை வழித்தடத்தில் ஒரு ரயில் இயக்குவதற்கு ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

    வேடந்தாங்கல் பரப்பளவு தனியார் மருந்து நிறுவனத்துக்காக குறைப்பா? வனத்துறை விளக்கம் வேடந்தாங்கல் பரப்பளவு தனியார் மருந்து நிறுவனத்துக்காக குறைப்பா? வனத்துறை விளக்கம்

    இதன் காரணமாக ரும் 12ம் தேதி முதல் சென்னை அருகே செங்கல்பட்டு, அரக்கோணத்தில் இருந்து முக்கிய ரயில்களை இயக்கப்பட உள்ளது. இதனால் சென்னையின் புறநகர் பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    English summary
    special trains to operate from Chengalpattu and arakkonam on 12th june: railway decided
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X