வியாழக்கிழமைகளில் பூஸ்டர் தடுப்பூசி ...தமிழகம் முழுவதும் 600 இடங்களில் நடைபெறும் - மா.சுப்ரமணியன்
சென்னை: தமிழகத்தில் 600 இடங்களிலும் சென்னையில் 160 இடங்களிலும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கான சிறப்பு தடுப்பூசி முகாம் வியாழக்கிழமை நடைபெறும் என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார். சனிக்கிழமை அன்று வழக்கமான சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வியாழக்கிழமை தோறும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி (Booster Dose Vaccine) சிறப்பு முகாம் நடைபெறும் என்றும் பொங்கல் பண்டிகையால் கொரோனா பாதிப்பு உயருமா? என்பது இரண்டு நாட்களில் தெரியவரும் எனவும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
தாராபுரத்தில் சோகம்.. ஆற்றில் குளிக்க சென்ற 5 மாணவர்கள் உட்பட 6 பேர் பலி.. பரிதாப சம்பவம்

பூஸ்டர் டோஸ் தடுப்பூசி
சென்னை சைதாப்பேட்டையில் 60 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு இல்லம் தேடி பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை செலுத்தும் பணியை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் இதுவரை 92,522 பேருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.

தடுப்பூசி முகாம்
ஜனவரி இறுதிக்குள் தமிழகத்தில் 10 லட்சம் பேர் பூஸ்டர் டோஸ் செலுத்த தகுதி பெறுவார்கள். தகுதி உடையவர்கள் உடனடியாக பூஸ்டர் டோஸ் தடுப்பு ஊசியை செலுத்தி கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இனி ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் தமிழகத்தில் 600 இடங்களிலும் சென்னையில் 160 இடங்களிலும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கான சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறும்.

கொரோனா பாதிப்பு எப்படி
சனிக்கிழமை அன்று வழக்கமான சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறும். நோய் தொற்று பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும் பரவல் அதிகமாக இருக்கிறது. பொங்கல் பண்டிகைக்காக நிறைய பேர் கிராமத்துக்கும் சொந்த ஊருக்கும் சென்று உள்ளனர் இதனால் பாதிப்பு வருமா என்பது இரண்டு நாட்களில் தெரியவரும் என்றும் தெரிவித்தார்.

மக்களுக்கு பாதிப்பு
கொரோனாவால் பாதிக்கப்படும் நபர்கள் தொலைபேசி என்னை தவறாக கொடுப்பதும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்கள் தொலைபேசி அழைப்புகளை எடுக்காமல் இருப்பதும் அவர்களுக்குத்தான் பாதிப்பை ஏற்படுத்தும் அதனால் அவர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மருத்துவ கலந்தாய்வு குறித்த வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் முடிவு தெரிந்தவுடன் கலந்தாய்வு தேதி குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.