சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திமுகவுக்கு திடீர் ஷாக்.. பாஜகவுக்கு தாவுகிறார் எம்எல்ஏ கு.க. செல்வம்.. முருகன் அடிச்ச ஜாக்பாட்!

Google Oneindia Tamil News

சென்னை: ஆயிரம் விளக்கு திமுக எம்.எல்.ஏ. கு.க. செல்வம் பாஜகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சமீபத்தில் திமுகவில் இருந்து வி.பி. துரைசாமி பாஜகவில் இணைந்தார். இந்த நிலையில் மேலும் ஒரு முக்கியப்புள்ளி செல்ல இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவலால் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் 2021ல் சட்டசபைத் தேர்தல் நடக்கவிருக்கிறது. இதையொட்டி அரசியல் நகர்வுகளும் வேகமாக நடந்து வருகிறது. கட்சிகளுக்குள் மாற்றுக் கட்சி பெரிய புள்ளிகளை ஈர்ப்பதற்கு போட்டா போட்டி நடந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு திமுகவில் இருந்து அந்தக் கட்சியின் துணை பொதுச் செயலாளராக இருந்த வி.பி. துரைசாமி பாஜகவில் இணைந்தார்.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கு- சிபிஐ விசாரிக்க பீகார் அரசு பரிந்துரை பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கு- சிபிஐ விசாரிக்க பீகார் அரசு பரிந்துரை

மன வருத்தம்

மன வருத்தம்

அப்போது இருந்தே இருதரப்பிலும் சல சலப்பு இருந்து வருகிறது. தமிழக பாஜகவின் துணைத் தலைவர்களில் ஒருவரான நயினார் நாகேந்திரன் திமுகவில் இணைய இருப்பதாக செய்தி வெளியாகி இருந்தது. இதை அவரும் சூசகமாக அளித்திருந்த பேட்டியில் கூறியிருந்தார். மன வருத்தம் இருக்கிறது என்று குறிப்பிட்டு இருந்தார்.

திருச்சியில் சந்திப்பு

திருச்சியில் சந்திப்பு

கடந்த வாரம் திருச்சியில் திமுக மூத்த தலைவர் கே.என்.நேருவை சந்தித்து நயினார் நாகேந்திரன் பேசியதாக தகவல் வெளியானது. பாஜகவில் தலைவர் பதவி கிடைக்கும் என்று காத்திருந்த நயினாருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் வருத்தத்தில் இருந்ததாக கூறப்பட்டது. இதையடுத்து, அவரிடம் திமுகவினர் பேசியதாக செய்தி வெளியானது.

அவசரக்குடுக்கைகள்

அவசரக்குடுக்கைகள்

இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் இன்று ஒரு பதிவை நயினார் நாகேந்திரன் பதிவு செய்து இருந்தார். அந்தப் பதிவில், ''வருத்தம் உள்ளதா என்று கேட்டால் நிச்சயம் உண்டு என்று சொல்வேன்! கட்சி தலைமையின் கொள்கையையும், தொலைநோக்கு பார்வையையும் , உழைப்பை அங்கீகரிக்கும் மாண்பையும் அறியாத அவசரக்குடுக்கைகளை கண்டு ஒவ்வொரு பாஜக காரனுக்கும் ஏற்படும் நியாயமான கோபமும் வருத்தமும் எனக்கும் உண்டு !!

நண்பர்களே என் கருத்தை தெளிவாக படிக்கவும் !! என் கோபம் பாஜக வை விட்டு செல்பவர்களுக்கு எதிரானது'' என்று குறிப்பிட்டு இருந்தார்.

கு.க. செல்வம்

கு.க. செல்வம்

இந்த நிலையில் ஆயிரம் விளக்கு திமுக எம்.எல்.ஏ. கு.க. செல்வம் பாஜகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது எந்தளவிற்கு உண்மை என்று தெரியாவிட்டாலும், அரசியல் வட்டாரத்தில் இதை உறுதிபடுத்தும் வகையில்தான் பேச்சு நடந்து வருகிறது. மூத்த பத்திரிக்கையாளர்களும் இதை உறுதிபடுத்துகின்றனர்.

எல். முருகன்

எல். முருகன்

இதற்கு முன்னதாக தமிழக பாஜகவின் தலைவராக தமிழிசை சவுந்தரராஜன் இருந்தபோது, வேறு கட்சிகளில் இருந்த தலைவர்களை பாஜகவுக்கு இழுக்கும் காரியத்தை செய்தது இல்லை. ஆனால், தற்போது தலைவராக இருக்கும் எல். முருகன் பதவியேற்ற பின்னர் வேறு கட்சிகளில் இருக்கும் பிரபலங்களை, சினிமா நட்சத்திரங்களை கட்சிக்குள் இழுக்கும் பணியை துரிதமாக, கச்சிதமாக செய்து வருகிறார்.

இன்று சேருகிறார்

இன்று சேருகிறார்

பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா முன்னிலையில் இன்று மாலை 4 மணிக்கு செல்வம் பாஜகவில் இணைகிறார். இதற்கான ஏற்பாடுகள் துரிதமாக நடந்து வருகிறது.

English summary
speculation that DMK MLA KU.Ka selvam may join with BJP
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X