சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தோனியின் தீவிர ரசிகர்.. அஸ்வினுக்காக பொங்கியவர்.. அன்பழகனின் அறியப்படாத கிரிக்கெட் பக்கம்!

Google Oneindia Tamil News

சென்னை: இன்று கொரோனா காரணமாக மரணம் அடைந்த திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் மிக தீவிரமான கிரிக்கெட் ஆர்வலர் மற்றும் வல்லுனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Recommended Video

    யாருக்கும் தெரியாத Anbazhagan-ன் Cricket பக்கம்

    திமுக எம்எல்ஏ மற்றும் சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் ஜெ. அன்பழகன் இன்று காலை கொரோனா காரணமாக மரணம் அடைந்தார். இந்தியாவில் கொரோனா காரணமாக பலியாகும் முதல் எம்எல்ஏ ஜெ. அன்பழகன்தான்.

    இவருக்கு கடந்த 2ம் தேதி காய்ச்சல் அறிகுறி வந்தது. அதன்பின் அவருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவருக்கு 10 நாட்களாக தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை மரணம் அடைந்தார்.

    எப்ப போன் பண்ணாலும் எடுப்பார்.. கால் மிஸ்ஸே ஆனதில்லை.. ஜெ. அன்பழகனை நினைவு கூறும் மக்கள்எப்ப போன் பண்ணாலும் எடுப்பார்.. கால் மிஸ்ஸே ஆனதில்லை.. ஜெ. அன்பழகனை நினைவு கூறும் மக்கள்

    கிரிக்கெட் ரசிகர் இவர்

    கிரிக்கெட் ரசிகர் இவர்

    திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் மிக தீவிரமான கிரிக்கெட் ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் சிஎஸ்கே அணிக்கு இவர் தீவிரமான விசிறி என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக தமிழக அரசியல்வாதிகள் யாரும் பெரிய அளவில் விளையாட்டுகளில் ஆர்வம் காட்டியது கிடையாது. ஆனால் ஜெ. அன்பழகன் அப்படி இல்லை. தமிழகத்தில் கிரிக்கெட் குறித்து மிக தீவிரமான கருத்துக்களை ஜெ. அன்பழகன் பேசி வந்தார்.

    உலகக் கோப்பை தொடர்

    உலகக் கோப்பை தொடர்

    கடந்த வருடம் உலகக் கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் தொடர் நடந்த போதுதான் ஜெ. அன்பழகன் கிரிக்கெட் ரசிகர் என்று பலருக்கும் தெரிந்து இருக்கும். ஆனால் அவர் கிரிக்கெட் ரசிகர் என்பதையும் தாண்டி, மிக சிறந்த கிரிக்கெட் வல்லுநர். உதாரணமாக உலகக் கோப்பை செமி பைனல் போட்டிக்கு எந்த அணிகள் செல்லும் என்பதை மிக சிறப்பாக தொடரின் தொடக்கத்திலேயே கணித்தவர்தான் ஜெ. அன்பழகன்.

    செமி பைனல் அணிகள்

    செமி பைனல் அணிகள்

    அவர் கணித்தது போல இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய அணிகள் செமி பைனல் போட்டிகளில் விளையாடியது. அதேபோல் இந்திய கிரிக்கெட் அணியில் ஆடும் லெவன் அணியில் செய்ய வேண்டிய மாற்றங்களை மிக விவரமாக புள்ளி விவரத்துடன் வெளியிட்டு வந்தார். உலகக் கோப்பை தொடர் முழுக்க இவர் அது தொடர்பாக டிவிட்டரில் கமெண்டரி கொடுத்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    அஸ்வின் குறித்து பேசினார்

    அஸ்வின் குறித்து பேசினார்

    அதேபோல் கடந்த உலகக் கோப்பை 50 ஓவர் தொடரில் அஸ்வின் சேர்க்கப்படாதது குறித்து அன்பழகன் கண்டனம் தெரிவித்து இருந்தார். அவர் தமிழக வீரர் என்பதற்காக சொல்லவில்லை. அவர் சிறந்த விக்கெட் டேக்கர். இங்கிலாந்து பிச்சில் நன்றாக பவுலிங் செய்ய கூடியவர் என்று கூறினார். அவர் கூறியது போலவே சென்ற உலகக் கோப்பை தொடரில் இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்பின்னர்கள் பெரியதாக விக்கெட் எதுவும் எடுக்கவில்லை.

    தோனியின் தீவிரமான விசிறி

    தோனியின் தீவிரமான விசிறி

    அதேபோல் இவர் மிக தீவிரமான தோனி விசிறி என்பதும் குறிப்பிடத்தக்கது. எனக்கு தோனி மிகவும் பிடிக்கும், சச்சினின் மிக தீவிரமான விசிறி நான் என்று இவர் வெளிப்படையாகவே குறிப்பிட்டு இருக்கிறார். சிஎஸ்கே அணியை பாராட்டி இருக்கிறார். சிஎஸ்கே அணிக்கு இவர் மிக நெருக்கமானவர் மற்றும் தீவிர விசிறி என்பது குறிப்பிடத்தக்கது. கண்டிப்பாக கிரிக்கெட் ரசிகர்கள் பலர் இவரை மிஸ் செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்து.

    English summary
    Sportsman and Hardcore Dhoni Fan: J Anbazhagan and his engrossment on Cricket matches.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X