சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இலங்கையில் தீவிரவாதியை விரட்டி தன் உயிரை கொடுத்து நூற்றுக்கணக்கான உயிர்களை காத்த ஹீரோ ரமேஷ் ராஜூ!

Google Oneindia Tamil News

Recommended Video

    இலங்கையில் ராணுவம் நடத்திய சோதனையில் 21 கையெறி குண்டுகள் பறிமுதல்- வீடியோ

    சென்னை: இலங்கையில் தீவிரவாதியை தடுத்து நிறுத்தி தன் உயிரை கொடுத்து ஆயிரம் உயிர்களை ரமேஷ் ராஜூ காப்பாற்றியுள்ள சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையின் போது நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் 360 பேர் கொல்லப்பட்டனர். 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    இந்த சம்பவத்துக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த தற்கொலை படை தாக்குதலை 7 பேர் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஒரு தேவாலயத்துக்குள் நுழைய முயன்ற தீவிரவாதியை தடுத்து நிறுத்தியபோது குண்டுவெடித்து ஒருவர் உயிரிழந்தார்.

     இலங்கையில் நீடிக்கும் பதற்றம்.. மர்ம நபர்களிடமிருந்து 21 கையெறி குண்டுகள் பறிமுதல்.. தொடரும் சோதனை! இலங்கையில் நீடிக்கும் பதற்றம்.. மர்ம நபர்களிடமிருந்து 21 கையெறி குண்டுகள் பறிமுதல்.. தொடரும் சோதனை!

    இரு குழந்தைகள்

    இரு குழந்தைகள்

    இதன் மூலம் 400-க்கும் மேற்பட்டோர் காப்பாற்றப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஜியான் தேவாலயத்தில் கட்டட ஒப்பந்ததாரராக இருந்தவர் ரமேஷ் ராஜூ (40). இவரது மனைவி ஜிரிஷாந்தினி. இவர்களுக்கு ருக்ஷிகா (14), நிருபன் (12) என்ற இரு குழந்தைகள் உள்ளனர்.

    தேவாலயம்

    தேவாலயம்

    ஜிரிஷாந்தினி தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த நேரத்தில் ஜிரிஷாந்தினி குழந்தைகளுக்கு தேவாலயத்தில் பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.

    பெரிய பை

    பெரிய பை

    சிறிது நேரம் கழித்து ஜிரிஷாந்தினியும் குழந்தைகளும் சாப்பிடுவதற்காக வெளியே வந்தனர். அப்போது முதுகில் பெரிய பையுடன் ஒருவர் தேவாலயத்தில் நுழைந்தார். அவரை பார்த்த ரமேஷ் ராஜூ, அவரை தடுத்து நிறுத்தி பையில் என்ன உள்ளது என கேட்டுள்ளார்.

    குண்டுவெடிப்பு

    குண்டுவெடிப்பு

    அப்போது அந்த நபர் பையில் கேமரா இருப்பதாகவும் தேவாலயத்தை போட்டோ எடுக்க வந்ததாகவும் கூறியுள்ளார். எனினும் அவரை ரமேஷ் ராஜூ வெளியே அனுப்பியுள்ளார். அப்போது குண்டுவெடித்துள்ளது. இதில் ரமேஷ் ராஜூ காயமடைந்தார். அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்.

    சப்தம்

    சப்தம்

    இதுகுறித்து ஜிரிஷாந்தினி கூறுகையில் என் கணவர் எதையோ தவறாக உணர்ந்துள்ளார். அதனால்தான் அந்த நபரை உள்ளே அனுப்ப மறுத்துவிட்டார். ஒரு வேளை அவரை உள்ளே வர அனுமதித்திருந்தால் அந்த தேவாலயத்தில் இருந்த 400-க்கும் மேற்பட்டோர் பலியாகியிருப்பர். வெடிகுண்டு சப்தம் கேட்டதும் நாலாப்புறமும் மக்கள் சிதறி ஓடினர் என்றார்.

    English summary
    Ramesh Raju stopped a man with a backpack from entering the Zion church full of worshippers.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X