சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு

Google Oneindia Tamil News

Recommended Video

    பிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்- வீடியோ

    சென்னை: யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இலங்கை அரசால் பல ஆண்டுகளாக சிறைவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி அறப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்களின் போராட்டம் வெற்றிபெற வாழ்த்து தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    சிங்களப் பேரினவாத இலங்கை அரசால் பல ஆண்டுகளாக சிறைவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்திருக்கிற அறப்போராட்டம் பெரும் மகிழ்வினைத் தருகிறது.

    Sri Lankan Tamil student protesting for Tamil leaders

    ஈழப்போர் நிறைவுற்று பத்தாண்டுகளைக் கடக்கப் போகிற நிலையில் இலங்கை அரசால் கைதுசெய்யப்பட்டிருக்கிற தமிழ் அரசியல் கைதிகளை இன்னும் சிறையிலே வைத்திருப்பது அப்பட்டமான மனித உரிமை மீறல்.

    பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் எனும் பெயரில் கொடுஞ்சட்டத்தைக் கட்டவிழ்த்துவிட்டு சிறைப்படுத்தப்பட்டுள்ள தமிழ் கைதிகள் தங்களது விடுதலைக்காகத் தொடர் பட்டினிப்போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறார்கள். அதற்கு வலுசேர்க்கும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்திருக்கும் நடைப்பயண போராட்டத்தை முழுமையாக ஆதரிக்கிறேன்.

    எமது போராட்ட வடிவங்கள் மாறலாம்; ஆனால், போராட்ட இலட்சியம் ஒருபோதும் மாறப்போவதில்லை எனும் தமிழ்த்தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் புரட்சிகர மொழிகளுக்கேற்ப அன்னைத் தமிழ் சொந்தங்களின் விடுதலைக்காக அறப்போராட்டத்தை முன்னெடுத்திருக்கிற தமிழ் இளையோர் கூட்டத்தின் போர்க்குணத்தினையும், போராட்ட உணர்வினையும் கண்டு உள்ளம் பூரிப்படைகிறேன்.

    சர்வதேச விதிகளுக்கு மாறாக சிறைக்கொட்டடிக்குள் வதைக்கப்பட்டுக் கொண்டிருக்கிற 107 தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை கோரிக்கை என்பது மிக மிகத் தார்மீகமானது. அதனை வலியுறுத்தி தொடர் போராட்டத்தை முன்னெடுத்திருக்கிற யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கும், அவர்களுக்கு உறுதுணையாக இணைந்திருக்கிற கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் எனது புரட்சிகரமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    English summary
    Sri Lankan Tamil student protesting for releasing of Tamil political leaders.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X