சென்னை- யாழ்ப்பாணம் இடையே பயணிகள் விமான சேவை தொடங்கியது!
சென்னை/யாழ்ப்பாணம்: சென்னையில் இருந்து இலங்கையின் யாழ்ப்பாணத்துக்கு பயணிகள் விமான சேவை அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்தது.
சென்னையில் நேற்று காலை 10.35 மணிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் பிற்பகல் யாழ்ப்பாணம் புதிய சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தது.

அதே விமானம் பிற்பகல் 12.45 மணிக்கு சென்னைக்கு புறப்பட்டது. 90 நிமிடங்களில் அந்த விமானம் சென்னையை வந்தடைந்தது.
சென்னைக்கு வந்த விமானத்தில் வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவனும் பயணித்தார். திங்கள், புதன், சனி ஆகிய நாட்களில் இந்த விமான சேவை இயக்கப்பட உள்ளது.
இதனிடையே பிட்ஸ் ஏர்வே என்ற இலங்கை நிறுவனமும் விமான சேவைகளை இயக்குவதற்கான அனுமதியை பெற்றுள்ளது.