ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ பழனி மனைவி, மகளுக்கும் கொரோனா.. சென்னை மருத்துவமனையில் சிகிச்சை
கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பழனியின் மனைவிக்கும், மகளுக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
Recommended Video
ஸ்ரீபெரும்புதூர் சட்டசபை உறுப்பினராக அதிமுகவை சேர்ந்த கே.பழனி பதவி வகித்து வருகிறார். அவருக்கு வயது 57. கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக, பாதிக்கப்பட்ட ஸ்ரீபெரும்புதூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட பொதுமக்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக நிவாரண பொருள்களை தினமும் ஏதாவது ஒரு பகுதியில் வழங்கி வந்தார்.

இப்படி தொடர்ந்து பொதுமக்கள் சேவையில் ஈடுபட்டிருந்ததால், நிறைய பேருடன் நெருங்கி பழகும் நிலை ஏற்பட்டது. இதனால், கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளார். இவருக்கு நீரிழிவு நோயும் உள்ளது. சென்னை மியாட் மருத்துவமனையில் பழனி சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.
இந்த நிலையில் பழனியின் மனைவிக்கும், மகளுக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவர்களும் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார். இது அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் இருவரும் குணமடைந்து திரும்ப வேண்டும் என்று தொகுதி மக்கள் வேண்டி வருகிறார்கள்.
முன்னதாக, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி திமுக சட்டசபை உறுப்பினர் ஜெ.அன்பழகன், தொடர்ந்து மக்களோடு கலந்து, மக்கள் சேவையில் ஈடுபட்டதால், கொரோனா தாக்கத்திற்கு உள்ளானார். அவருக்கு ஏற்கனவே, பல்வேறு, உடல்நல பிரச்சினைகள் இருந்தன என்பதால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications