சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

Exclusive: தமிழகத்தைச் சூழ்ந்து நிற்கும் பிரச்சினைகள்.. நீதி கிடைக்க போராடுவோம்.. ஸ்ரீபிரியா

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தை பல்வேறு பிரச்சனைகள் சூழ்ந்துள்ளன. அதனால் மக்கள் நலனை பாதிக்கும் அனைத்து பிரச்சனைகளையும், எங்கள் சொந்தப் பிரச்சனையாக கருதி அதற்கு தீர்வு காணும் வழிமுறைகளை எடுத்துரைப்போம். மேலும், ஊழலற்ற ஆட்சி, இலவச கல்வி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை பரப்புரையின் மையக்கருவாக எடுத்துள்ளோம் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீபிரியா கூறியுள்ளார்.

மக்களவைத் தேர்தல் பணிகள் சூடுபிடித்துள்ள நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் மகளிர் அணி ஒருங்கிணைப்பாளரும், நடிகையுமான ஸ்ரீபிரியா ஒன் இந்தியா தமிழுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.

sripriya exclusive interview

கேள்வி: தமிழக அரசியலில் மக்கள் நீதி மய்யத்தின் பயணம் எதை நோக்கி செல்கிறது?

பதில்: மக்கள் நீதி மய்யம் மக்களுக்கு நீதி கிடைப்பதற்காக போராடி வருகிறது. மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகதான் கட்சியே தொடங்கப்பட்டது. ஆகையால், எங்கள் பயணம் நீதியை நோக்கி செல்கிறது.

கேள்வி: மக்கள் நீதி மய்யத்திற்கு, டார்ச் லைட் சின்னம் கிடைத்தது பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்: டார்ச் லைட் சின்னம் கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இதைவிட ஒரு நல்ல சின்னம் எங்களுக்கு கிடைத்திருக்காது. எங்கள் கட்சிக்கு டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்கீடு செய்த தேர்தல் ஆணையத்துக்கு நன்றி.

கேள்வி: மக்களவைத் தேர்தலில் எதை மையக்கருவாக வைத்து உங்கள் கட்சியினர் பரப்புரையில் ஈடுபடுவார்கள் ?

பதில்: தமிழகத்தை பல்வேறு பிரச்சனைகள் சூழ்ந்துள்ளன. அதனால் மக்கள் நலனை பாதிக்கும் அனைத்து பிரச்சனைகளையும், எங்கள் சொந்தப் பிரச்சனையாக கருதி அதற்கு தீர்வு காணும் வழிமுறைகளை எடுத்துரைப்போம். மேலும், ஊழலற்ற ஆட்சி, இலவச கல்வி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை பரப்புரையின் மையக்கருவாக எடுத்துள்ளோம்.

கேள்வி: கமலுக்கு வாக்குகேட்டு கெஜ்ரிவால் தமிழகம் வருவாரா?

பதில்: கெஜ்ரிவால் வருவார் என எதிர்பார்க்கிறோம்.

கேள்வி: மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வருமா? நம்பிக்கை உள்ளதா?

பதில்: நம்பிக்கை உள்ளது. நிச்சயம் நாங்கள் ஆட்சிக்கு வருவோம்.

கமல்ஹாசனின் சம்மட்டி அடி கேள்விகள்.. கமல்ஹாசனின் சம்மட்டி அடி கேள்விகள்.. "அம்மா"வின் அரசு என்ன செய்ய போகிறது

English summary
Sripriya's special interview to Oneindia Tamil
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X