சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கனிமொழியின் வெற்றிக்கு எதிரான வழக்கு.. தொடர்ந்து நடத்த வாக்காளர் கோரிக்கை

Google Oneindia Tamil News

சென்னை: கனிமொழிக்கு எதிராக தமிழிசை சவுந்தரராஜன் தாக்கல் செய்த தேர்தல் வழக்கை தொடர்ந்து நடத்த அனுமதி கோரி தொகுதி வாக்களரான ஸ்ரீ வைகுண்டத்தை சேர்ந்த முத்து ராமலிங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

நடந்து முடிந்த தூத்துக்குடி மக்களவை தேர்தலில் கனிமொழி வெற்றி பெற்றதாக அறிவிக்கபட்டது. அவருடைய வெற்றி செல்லாது என அறிவிக்ககோரி பா.ஜ. வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்தார்.

SriVaikuntham voter seeks case against Kanimozhi to be taken for hearing

தெலுங்கானாவின் ஆளுநராக நியமிக்கபட்ட பின், தேர்தல் வழக்கை திரும்ப பெற அனுமதி கோரி தமிழிசை சவுந்தரராஜன் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், கனிமொழிக்கு எதிராக தாக்கல் செய்யபட்ட தேர்தல் வழக்கை திரும்ப பெறுவது தொடர்பாக பத்திரிக்கைகளில் விளம்பரம் வெளியிட உத்தரவிட்டார்.

பத்திரிக்கையில் விளம்பரம் வெளியிடப்பட்டதை தொடர்ந்து, தமிழிசை சவுந்தரராஜன் தாக்கல் செய்த தேர்தல் வழக்கை தொடர்ந்து நடத்த அனுமதி கோரி, தொகுதி வாக்களரான ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த முத்து ராமலிங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

போலீசார் போராட்டத்திற்கு பதிலடி.. டெல்லியில் இன்று வக்கீல்கள் போராட்டம்.. நீதிமன்ற புறக்கணிப்புபோலீசார் போராட்டத்திற்கு பதிலடி.. டெல்லியில் இன்று வக்கீல்கள் போராட்டம்.. நீதிமன்ற புறக்கணிப்பு

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், உரிய நீதிமன்ற கட்டணத்தை செலுத்தும்படி, முத்துராமலிங்கத்துக்கு அறிவுறுத்தி, விசாரணையை நவம்பர் 11 ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

English summary
A voter from Srivaikuntham seeks the case against Kanimozhi's victory in Tuticorin to be taken for hearing. This plea was adjourned to November 11.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X