சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கன்னியாகுமரி எஸ்.ஐ வில்சன் கொலை வழக்கு விசாரணை என்.ஐ.ஏ.வுக்கு மாற்றம்

Google Oneindia Tamil News

Recommended Video

    சிறப்பு எஸ்எஸ்ஐ வில்சன் கொல்லப்பட்டது ஏன்? கொலையாளிகள் பரபரப்பு வாக்குமூலம் - வீடியோ

    சென்னை: கன்னியாகுமரி சிறப்பு எஸ்.ஐ. வில்சன் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு ஏஜென்சியான என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டுள்ளது.

    கன்னியாகுமரி களியக்காவிளை சோதனை சாவடியில் பணியில் இருந்த சிறப்பு எஸ்.ஐ. வில்சன், கடந்த மாதம் 8-ந் தேதி சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.. வில்சனை சுட்டுக் கொலை செய்த அப்துல் சமீம், தவ்பீக் ஆகிய தீவிரவாதிகள், கர்நாடகா மாநிலம் உடுப்பியில் கைது செய்யப்பட்டனர்.

    SSI Wilson murder case transfer to NIA

    இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இக்கொலை சம்பவத்தில் பலருக்கும் தொடர்பிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து பலரும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

    SSI Wilson murder case transfer to NIA

    இவர்கள் மீது ஊபா சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வழக்கில் தொடர்புடைய தீவிரவாதி சேக்தாவூத் நேற்று கைது செய்யபட்டார்.

    மீனவர் வேடத்தில் தாவூத்.. தீவிரவாதிகளுக்கு பணம் சப்ளை செய்தவர்.. வில்சன் கொலையில் இன்னொரு கைது! மீனவர் வேடத்தில் தாவூத்.. தீவிரவாதிகளுக்கு பணம் சப்ளை செய்தவர்.. வில்சன் கொலையில் இன்னொரு கைது!

    இதனிடையே கன்னியாகுமரி தனிப்படை போலீசார் விசாரித்து வந்த எஸ்.ஐ. வில்சன் தொடர்பான அனைத்து வழக்குகளும் தற்போது தேசிய புலனாய்வு ஏஜென்சியான என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டுள்ளன.

    English summary
    Kanyakumari SSI Wilson murder cases transfered to NIA.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X