சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முதல் முறையாக பிற்பகலில் தொடங்கிய 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள்.. வாழ்த்துகள் பசங்களா!

Google Oneindia Tamil News

சென்னை: 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முதல்முறையாக பிற்பகலில் தொடங்கியுள்து. இன்று தமிழ் தேர்வு நடைபெறுகிறது.

2018-19-ஆம் கல்வியாண்டுக்கான 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று பிற்பகல் 2மணிக்கு தொடங்கியது. இத்தேர்வு 29-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வழக்கம் போல் இந்த தேர்வு காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கி 12.45 மணி வரை நடக்கும்.

SSLC board exams starts today

இந்த ஆண்டு தமிழ், ஆங்கிலம் ஆகிய தேர்வுகள் மட்டும் பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி 4.45 மணிக்கு முடிவடையும். 10-ஆம் வகுப்பு தேர்வை பொருத்தமட்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 12 ஆயிரத்து 546 பள்ளிகளில் இருந்து 9 லட்சத்து 59 ஆயிரத்து 618 மாணவர்கள் கலந்து கொள்கின்றனர்.

உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட விரும்பாத விசிக.. தேர்தல் ஆணையத்தில் இன்று சின்னம் ஒதுக்கீடு உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட விரும்பாத விசிக.. தேர்தல் ஆணையத்தில் இன்று சின்னம் ஒதுக்கீடு

தனித் தேர்வர்களாக 38 ஆயிரத்து 176 பேர் பங்கேற்கின்றனர். அது போல் வேலூர், மதுரை, புழல், பாளையங்கோட்டை, திருச்சி உள்ளிட்ட சிறைகளில் இருந்து 152 சிறை கைதிகள் தேர்வு எழுதுகின்றனர்.

English summary
SSLC board exams are going to start today in both Tamilnadu and Pondicherry.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X