சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்.. ஆகஸ்ட் 10ல் வெளியாகும்.. தமிழக அரசு அறிவிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 10ல் வெளியாகும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடப்பதாக இருந்தது.

SSLC EXAM results will come on August 10 says Tamilnadu govt

அதன்பின் கொரோனா லாக்டவுன் காரணமாக தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது. அதன்பின் ஜூன் 1ம் தேதிக்கு தேர்வுகள் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. கடைசியில் மொத்தமாக தேர்வு ரத்து செய்யப்பட்டது.

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 10ல் வெளியாகும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.ஆகஸ்ட் 10 திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு பத்தாம் வகுப்பு ரிசல்ட் வெளியாகும். மாணவர்களுக்கு எவ்வளவு மதிப்பெண் வழங்கப்பட்டு இருக்கிறது என்று தமிழக கல்வித்துறை இணைய பக்கத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்று அரசு தெரிவித்துள்ளது.

கழுத்தில் தழைய தழைய தாலி.. நாவற்பழம் சாப்பிட்டு விட்டு.. தூக்கில் தொங்கிய ஜோடி.. பரபர பின்னணி!கழுத்தில் தழைய தழைய தாலி.. நாவற்பழம் சாப்பிட்டு விட்டு.. தூக்கில் தொங்கிய ஜோடி.. பரபர பின்னணி!

இது தொடர்பாக தமிழக அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மாணவர்கள் தங்கள் ரிசல்ட்டை tnresults.nic.in, http://dge1.tn.nic.in, http://dge2.tn.nic.in பக்கத்தில் பார்த்து தெரிந்து கொள்ள முடியும். ஏற்கனவே 10ம் வகுப்பில் மாணவர்கள் எல்லோரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இவர்களின் மதிப்பெண் வழங்கப்படவில்லை.

இந்த நிலையில் இறுதி தேர்வுக்கான மதிப்பெண் எப்படி நிர்ணயம் செய்யப்படும் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் இந்த மதிப்பெண் வழங்கப்படும். வகுப்பில் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வில் எடுத்த மதிப்பெண்ணில் இருந்து 80% மதிப்பெண் எடுக்கப்படும். வருகைப்பதிவேடு அடிப்படையில் 20% மதிப்பெண் எடுக்கப்படும். இதன் மூலம் 100% மதிப்பெண் கணக்கிடப்பட்டு இறுதி மார்க் சீட் வழங்கப்படும்.

English summary
SSLC EXAM results will come on August 10 says Tamilnadu government.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X