சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குழப்பமே வேண்டாம்.. 10ம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் இப்படித்தான் நிர்ணயிக்கப்படும்.. செம முடிவு!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் இறுதி தேர்வுக்கான மதிப்பெண் எப்படி நிர்ணயம் செய்யப்படும் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    10ம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் இப்படித்தான் நிர்ணயிக்கப்படும்

    தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடப்பதாக இருந்தது. அதன்பின் கொரோனா லாக்டவுன் காரணமாக தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது. பின் ஜூன் 1ம் தேதிக்கு தேர்வுகள் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

    அதன்பின் மீண்டும் ஜூன் 15ம் தேதிக்கு 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் இந்த தேர்வுக்கு எதிராக தமிழகம் முழுக்க கடும் எதிர்ப்பு நிலவி வந்தது. கொரோனா நேரத்தில் மாணவர்களுக்கு தேர்வு வைக்க கூடாது என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

    தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வு ரத்து.. அனைவரும் ஆல் பாஸ்: முதல்வர் அதிரடி அறிவிப்புதமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வு ரத்து.. அனைவரும் ஆல் பாஸ்: முதல்வர் அதிரடி அறிவிப்பு

    வழக்கு பதிவு

    வழக்கு பதிவு

    மேலும் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் வழக்கு சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த வழக்கு நடந்து வரும் நிலையில் தற்போது தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. முதல்வர் பழனிசாமி மற்றும் கல்விதுறை அமைச்சர் கே செங்கோட்டையன் ஆகியோர் ஆலோசனை செய்த பின் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    என்ன முடிவு

    என்ன முடிவு

    பொதுவாக 11ம் வகுப்பில் சேர வேண்டும் என்றால் 10ம் வகுப்பு மார்க் அடிப்படையில் மட்டுமே பாடப்பிரிவுகளை எடுக்க முடியும். அதாவது கணினி எடுக்க வேண்டுமா, காமர்ஸ் எடுக்க வேண்டுமா, அல்லது உயிரியல் எடுக்க வேண்டுமா என்பதை 10ம் வகுப்பு பொது தேர்வின் இறுதி மார்க்கை வைத்து மட்டுமே முடிவு செய்ய முடியும். ஆனால் 10ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு உள்ளதால் மாணவர்கள் எப்படி 11ம் வகுப்பில் சேர்வார்கள் என்று குழப்பம் ஏற்பட்டது.

    தீர்வு என்ன

    தீர்வு என்ன

    இந்த நிலையில் இதற்கும் தமிழக அரசு தீர்வு சொல்லி இருக்கிறது. தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் இறுதி தேர்வுக்கான மதிப்பெண் எப்படி நிர்ணயம் செய்யப்படும் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 10ம் வகுப்பில் மாணவர்கள் எல்லோரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள். அதோடு அவர்களுக்கு ஒரு இறுதி மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் இந்த மதிப்பெண் வழங்கப்படும்.

    செம முடிவு

    செம முடிவு

    அதாவது வகுப்பில் காலாண்டு தேர்வில் எடுத்த மதிப்பெண்ணில் இருந்து 40% மதிப்பெண் எடுக்கப்படும். அரையாண்டு தேர்வில் இருந்து 40% மதிப்பெண் எடுக்கப்படும். மேலும் வருகைப்பதிவேடு அடிப்படையில் 20% மதிப்பெண் எடுக்கப்படும். இதன் மூலம் 100% மதிப்பெண் கணக்கிடப்பட்டு இறுதி மார்க் சீட் வழங்கப்படும். இந்த மார்க் மூலம் மாணவர்கள் 11ம் வகுப்பில் சேர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    SSLC EXAM Tamilnadu: This is how marks will be allotted to students in the final exam.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X