சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை... ராஜன் செல்லப்பா கலக குரலுக்கு குன்னம் எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் ஆதரவு!

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமைதான் தேவை என எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா எழுப்பிய கலகக் குரலுக்கு குன்னம் தொகுதி எம்.எல்.ஏ. ராமச்சந்திரனும் ஆதரவு தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக சிதறிப் போயுள்ளது. அதிமுகவில் சசிகலா, முதல்வர் எடப்பாடிக்கு எதிராக திடீரென ஓபிஎஸ் தர்ம யுத்தம் நடத்தினார்.

மத்திய அரசின் நிதி ரூ.6,000 விவசாயிகளுக்கு கிடைக்க சிறப்பு இயக்கம் வேண்டும்.. ராமதாஸ் வலியுறுத்தல்மத்திய அரசின் நிதி ரூ.6,000 விவசாயிகளுக்கு கிடைக்க சிறப்பு இயக்கம் வேண்டும்.. ராமதாஸ் வலியுறுத்தல்

ஓபிஎஸ் அணி ஐக்கியம்

ஓபிஎஸ் அணி ஐக்கியம்

இதன் பின்னர் சசிகலா உள்ளிட்டோர் வெளியேற்றப்பட ஓபிஎஸ் அணி அதிமுகவில் இணைந்தது. அதேநேரத்தில் தாங்களே உண்மையான அதிமுக என தினகரன் கூறி வந்தார்.

சசிகலா பொதுச்செயலர்?

சசிகலா பொதுச்செயலர்?

லோக்சபா தேர்தல் முடிந்த கையோடு தினகரன் அமமுகவை தனிக்கட்சியாக்கி பொதுச்செயலரானார். இன்னொரு பக்கம் அதிமுகவின் பொதுச்செயலர் என சசிகலா உரிமை கோரி வருகிறார்.

அதிமுகவில் கலகக் குரல் வெடித்தது

அதிமுகவில் கலகக் குரல் வெடித்தது

இந்நிலையில் அதிமுகவில் தலைமை ஒருங்கிணைப்பாளர்களாக முதல்வர் ஈபிஎஸ்- துணை முதல்வர் ஓபிஎஸ் நீடிப்பதற்கு எதிராக கலக் குரல் வெடித்துள்ளது. அதிமுகவுக்கு தேவை ஒற்றைத் தலைமைதான்; இரட்டை தலைமை இருப்பதால் முடிவுகள் எடுப்பதில் தாமதமாகிறது என்று எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா போர்க்கொடி தூக்கி இருந்தார்.

எம்.எல்.ஏ. ஆதரவு

இதற்கு அதிமுக அமைச்சர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் குன்னம் தொகுதி எம்.எல்.ஏ. ராமச்சந்திரன், ராஜன் செல்லப்பாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அதிமுக்வுக்கு ஒற்றைத் தலைமைதான் தேவை என ராமச்சந்திரன் வலியுறுத்தி உள்ளார்.

English summary
Kunnam MLA Ramachandran also support to Madurai North MLA Rajan Chellappa's demand on a stable, single leadership for the AIADMK.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X