சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரஜினி அரசியல்வாதி அல்ல- ஒரு நடிகர்.. பெரியார் குறித்து சிந்தித்து பேச வேண்டும்.. ஸ்டாலின் அட்வைஸ்

Google Oneindia Tamil News

Recommended Video

    பெரியார் பற்றிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது.. ரஜினிகாந்த் பரபர பேட்டி

    சென்னை: நடிகர் ரஜினிகாந்த் பெரியார் குறித்து யோசித்து சிந்தித்து பேச வேண்டும் என திமுக தலைவர் முக ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

    பொங்கல் பண்டிகைக்கு முன்னர் ரஜினி துக்ளக் விழாவில் பேசிய பேச்சு இன்றும் கொழுந்து விட்டு எரிகிறது. சேலத்தில் பெரியார் பேரணி குறித்து குறிப்பிட்ட ரஜினி, பெரியார் குறித்து தவறான கருத்தை தெரிவித்தார்.

    இது தமிழகத்தில் பெரியாரிஸ்ட்டுகளை கோபத்தில் ஆழ்த்தியது. தனது கருத்தை ரஜினி திரும்ப பெற வேண்டும் , மன்னிப்பு கேட்க வேண்டும் என தி.க. அமைப்புகளும் கேட்டுக் கொண்டன.

    ஆஹா ரஜினிக்காக சப்போர்ட்.. களத்தில் குதித்த குஷ்பு.. என்ன சொல்லி இருக்காங்கன்னு பாருங்க!ஆஹா ரஜினிக்காக சப்போர்ட்.. களத்தில் குதித்த குஷ்பு.. என்ன சொல்லி இருக்காங்கன்னு பாருங்க!

    மன்னிப்பு கேட்க முடியாது

    மன்னிப்பு கேட்க முடியாது

    இன்று செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், தான் பேசியது தவறில்லை என்றும் 2017-இல் அவுட்லுக்கில் வெளியான ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும் குறிப்பிட்டார். மேலும் தனது செயலுக்கு மன்னிப்பு கேட்கவோ வருத்தம் தெரிவிக்கவோ முடியாது என ரஜினி திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.

    ஸ்டாலின்

    ஸ்டாலின்

    இந்த நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து திமுக கூட்டணி சார்பில் அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார்.

    ரஜினி ஒரு நடிகர்

    ரஜினி ஒரு நடிகர்

    அவர் கூறுகையில் ரஜினி அரசியல்வாதி அல்ல, அவர் ஒரு நடிகர். ரஜினியிடம் நான் ஒன்றை விரும்பி வேண்டிக் கேட்டு கொள்கிறேன்.

    தமிழின

    தமிழின

    95 ஆண்டு காலம் தமிழினத்திற்காக வாழ்ந்து போராடியவர் பெரியார். அவர் குறித்து பேசும் போது யோசித்து, சிந்தித்து பேச வேண்டும் என ரஜினியை வேண்டி கேட்டு கொள்கிறேன் என்றார் ஸ்டாலின்.

    English summary
    DMK President MK Stalin advises Rajinikanth to think before speak about Periyar as he fought for Tamil People till his end of the life.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X