சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மருமகன் சபரீசன் மீது வழக்கு பதிவு ஏன்.. ஸ்டாலின் பரபரப்பு விளக்கம்

Google Oneindia Tamil News

Recommended Video

    மருமகன் சபரீசன் மீது வழக்கு பதிவு ஏன்.. ஸ்டாலின் விளக்கம்

    சென்னை: பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தை திசை திருப்பவே சபரீசன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறினார்.

    பொள்ளாச்சி பாலியல் சம்பவம் அனைவரின் ஈரக்குலையையும் நடு நடுங்க வைத்தது அறிந்ததே. இந்நிலையில் இந்த பாலியல் சம்பவம் தொடர்பாக திமுகவின் இணையதளங்கள் மற்றும் சமூகவலைதளங்களில் தனது பெயருக்கு களங்கம் கற்பிப்பதாக ஸ்டாலின் மருமகன் சபரீசன் மீது துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    அது போல் பதிலுக்கு சபரீசனும் பொள்ளாச்சி ஜெயராமன் மீதும் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் கூறுகையில் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளை தப்பவிடாமல், உயர்நீதிமன்றக் கண்காணிப்பின் கீழ் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என கூட்டணி கட்சி தலைவர்களுடனான கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.

    பொள்ளாச்சி பாலியல் விவகாரம்.. போராடிய மாணவர்களை இழுத்து வேனில் ஏற்றிய புதுக்கோட்டை போலீஸ்பொள்ளாச்சி பாலியல் விவகாரம்.. போராடிய மாணவர்களை இழுத்து வேனில் ஏற்றிய புதுக்கோட்டை போலீஸ்

    வழக்கு பதிவு

    வழக்கு பதிவு

    பொள்ளாச்சி விவகாரம் தேர்தலில் எதிரொலிப்பதற்கு வாய்ப்புகள் ஏராளம் உள்ளன. ஆளும்கட்சியே குற்றவாளிகளுக்கு துணை நிற்கிறது. இதை எதிர்த்து போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதை திசை திருப்பவே எனது மருமகன் சபரீசன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    தயார்

    தயார்

    எனது தூண்டுதலின் பேரில் எல்லாம் நடப்பதாக புகாரும் அளித்துள்ளனர். இதை சட்டரீதியாக எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். எதற்கும் தயாராகவே உள்ளோம்.

    சதி

    சதி

    தேர்தல் நடத்த வேண்டும் என்பது எங்களுடைய நோக்கம். தேர்தல் நடத்தக் கூடாது என்பது மத்திய- மாநில அரசுகளின் நோக்கமாக உள்ளது. தேர்தல் நடந்தால் ஆட்சி இருக்காது என்பதால் இதுபோல் சதி செய்கின்றனர்.

    நாங்களும்தான்

    நாங்களும்தான்

    எனவே தமிழக மக்களே தயாராக இருங்கள். இந்த ஆட்சிகளை அப்புறப்படுத்த நாங்கள் செயல்பட்டு கொண்டிருக்கிறோம் என்றார் ஸ்டாலின்.

    English summary
    DMK President MK Stalin explains why case filed against his son in law Sabareesan.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X