சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நம்பிக்கையில்லா தீர்மானத்தில் திமுக உறுதியாக உள்ளதா?.. "வெயிட் அன்ட் சீ" என ஸ்டாலின் பதில்

Google Oneindia Tamil News

சென்னை: சட்டசபையில் நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த கேள்விக்கு வெயிட் அன்ட் சீ என திமுக தலைவர் ஸ்டாலின் பதில் அளித்தார்.

சட்டசபை இடைத்தேர்தல் நடைபெறுவதற்கு முன்பே டிடிவி தினகரனுடன் தொடர்பு வைத்திருப்பதாக கூறி எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி (அறந்தாங்கி), பிரபு (கள்ளக்குறிச்சி), கலைச்செல்வன் (விருத்தாசலம்) ஆகிய 3 எம்எல்ஏக்களுக்கு விளக்கம் கேட்டு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார்.

இதை எதிர்த்து பிரபுவை தவிரத்து மற்ற இருவர் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டனர். 3 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்யக் கூடாது என தீர்ப்பளித்தது. இதனிடையே சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை திமுக கொண்டு வந்தது.

மேகதாது பற்றி இங்கே பேசக்கூடாது.. காவிரி மேலாண்மை ஆணையத்தில் தமிழக அரசு அதிரடி மேகதாது பற்றி இங்கே பேசக்கூடாது.. காவிரி மேலாண்மை ஆணையத்தில் தமிழக அரசு அதிரடி

சட்டசபை

சட்டசபை

இந்த நிலையில் இடைத்தேர்தலில் மொத்தம் 22 தொகுதிகளில் 13 தொகுதிகளில் திமுகவும் 3 தொகுதிகளில் அதிமுகவும் வெற்றிபெற்றது. இந்த இதனால் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சி தப்பியது. இன்றைய தினம் திமுகவின் 13 எம்எல்ஏக்களும் பதவியேற்க சட்டசபைக்கு வந்தனர்.

ஸ்டாலின் சந்திப்பு

ஸ்டாலின் சந்திப்பு

அப்போது திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் சபாநாயகர் தனபால் 13 பேருக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை ஸ்டாலின் சந்தித்தார்.

தெரியும்

தெரியும்

அப்போது சட்டசபையில் திமுக எம்எல்ஏக்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என கேட்கப்பட்டது. அதற்கு ஸ்டாலின், திமுக எம்எல்ஏக்கள் எப்படி செயல்படுவார்கள் என்பது சட்டசபை கூடும்போது தெரியும் என்றார்.

101 பலம்

101 பலம்

இதைத் தொடர்ந்து சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டதில் திமுக உறுதியாக உள்ளதா என செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு ஸ்டாலின் வெயிட் அன்ட் சீ என பதில் அளித்தார். 13 எம்எல்ஏக்கள் பதவியேற்றதன் மூலம் திமுகவின் பலம் 101ஆக அதிகரித்துள்ளது. திமுக கூட்டணியின் பலம் 110-ஆக உள்ளது.

English summary
DMK President MK Stalin says wait and see as the reply for the question whether DMK is strong on no confidence motion against Speaker?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X