சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மறுபடி கம்பேக் வேணும்னா இதை பண்ணியே ஆகணும்; ஸ்டாலினிடம் தெரிவித்த ஐபேக்... உறைந்துபோன சீனியர்கள்!

Google Oneindia Tamil News

சென்னை: திமுகவில் தற்போது இருக்கும் எம்.எல்.ஏக்களில் மக்கள் செல்வாக்கு உள்ளவர்களை தவிர்த்து வயதானவர்கள் அடங்கிய ஒரு லிஸ்ட்டை தனியாக ஸ்டாலினிடம் கொடுத்துள்ளது ஐபேக்.

ஐ பேக் கொடுத்த லிஸ்டில் உள்ள முதியவர்களை ஸ்டாலின் களையெடுக்க தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது. புதியவர்கள் சிலருக்கு வாய்ப்பளிக்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது.

திமுக மீது எப்போதும் வீசப்படும் விமர்சனங்களில் முக்கியமானது இளைஞர்களை ஓரம்கட்டி விட்டு வயதானவர்களுக்கு மீண்டும், மீண்டும் வாய்ப்பளிப்பது. இதில் கவனம் செலுத்த வேண்டும் என்று ஸ்டாலினிடம் ஐ பேக் கறாராக கூறிவிட்டதாக தெரிகிறது.

பம்பரமாக சுழலும் தேர்தல் களம்

பம்பரமாக சுழலும் தேர்தல் களம்

சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில் தேர்தல் களம் பம்பரமாக சுழன்று வருகின்றன. பிரதான கட்சிகள் முதல் லெட்டர் போர்டு கட்சிகள் வரை கூட்டணி, தொகுதி பங்கீடு என ஓய்வில்லாமல் ஓடியாடி வருகின்றன. தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான திமுக ஒருபக்கம் கூட்டணி பேச்சுவார்த்தை, மற்றொரு புறம் வேட்பாளர்கள் நேர்காணல் என ஜெட் வேகத்தில் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

திமுகவுக்கு காம்பேக் கொடுக்குமா ஐ பேக்

திமுகவுக்கு காம்பேக் கொடுக்குமா ஐ பேக்

தமிழகத்தில் தொடர்ந்து 2-வது முறையாக இரட்டை இலை(அதிமுக) ஆட்சியில் அமர்ந்திருக்க, இந்த முறை உதயசூரியனை கட்டாயம் உதிக்கச் செய்து விட வேண்டும் என்ற கட்டாயத்தில் மு.க.ஸ்டாலின் உள்ளார். தேர்தல் வெற்றி என்னும் இலக்கை அடைய சில ஆண்டுகளுக்கு முன்பே பணியை தொடங்கி விட்டார் ஸ்டாலின். இதற்காக ஸ்டாலினின் வலது கரமாக ஐ பேக் செயல்பட்டு வருகிறது. மக்கள் கிராம சபை கூட்டம், உங்கள் தொகுதியில் ஸ்டாலின் இவையெல்லாம் ஐ பேக் மூளையில் உதித்த சிந்தனைதான்.

போட்டியிடுபவர்கள் பட்டியல் ரெடி

போட்டியிடுபவர்கள் பட்டியல் ரெடி

திமுக தலைவர் ஸ்டாலின் உள்பட 99 எம்.எல்.ஏக்களும் மீண்டும் தேர்லில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளனர். எந்த தொகுதியில் யார், யார் போட்டியிடலாம்? யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்? மக்களிடத்தில் செல்வாக்கு உள்ள நபர்கள் யார்? என்ற பட்டியலை ஸ்டாலினிடம் ஐ பேக் டீம் ஏற்கனவே கொடுத்து விட்டது. அந்த பட்டியலையும், தற்போது நேர்காணலுக்கு வருபவர்களின் பட்டியலையும் இணைத்து இறுதி முடிவு எடுக்க முடிவு செய்துள்ளார் மு.க.ஸ்டாலின்.

வயதானவர்கள் லிஸ்ட் தனி

வயதானவர்கள் லிஸ்ட் தனி

திமுக மீது எப்போதும் வீசப்படும் விமர்சனங்களில் முக்கியமானது இளைஞர்களை ஓரம்கட்டி விட்டு வயதானவர்களுக்கு மீண்டும், மீண்டும் வாய்ப்பளிப்பது என்பதாகும். தற்போது இருக்கும் எம்.எல்.ஏக்களில் மக்கள் செல்வாக்கு உள்ளவர்களை தவிர்த்து வயதானவர்கள் அடங்கிய ஒரு லிஸ்ட்டை தனியாக ஸ்டாலினிடம் கொடுத்துள்ளது ஐபேக்.

மக்கள் வைக்கும் குற்றச்சாட்டு இதுதான்

மக்கள் வைக்கும் குற்றச்சாட்டு இதுதான்

தற்போது எம்.எல்.ஏவாக இருக்கும் சுமார் 30% பேர் இந்த லிஸ்டில் வந்து விட்டதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த 30% லிஸ்டில் முக்கிய புள்ளிகள் சிலரின் பெயரும் அடிபடுவதாக கூறப்படுகிறது. திமுக மீது உள்ள பிரதான விமர்சனமே மூத்தவர்களுக்கு, வயதானவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுப்பதுதான். கருத்து கணிப்புகளில் இந்த குற்றச்சாட்டை பெரும்பாலான மக்கள் குறிப்பாக இளைஞர்கள் முன்வைப்பதாகவும், தமிழகத்தில் திரும்பவும் கம்பேக் கொடுக்க வேண்டுமானால் இதனை கவனிக்க வேண்டும் என்று ஐ பேக் திமுக தலையிடம் கறாராக தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது.

 ஸ்டாலின் எடுத்த அதிரடி

ஸ்டாலின் எடுத்த அதிரடி

வயது முதிர்வால் கட்சி பணிகளில் ஈடுபட முடியாது, அவர்களால் புதிய தலைமுறை ஓட்டுக்களை கவர முடியாது, தொகுதி மக்களின் அதிருப்தி ஆகியவற்றை ஆதாரத்துடன் ஐ பேக் எடுத்து வைத்து விட்டதாகவும் தெரிகிறது. இதனை நன்கு உள்வாங்கிக் கொண்ட ஸ்டாலின் ஐ பேக் கொடுத்த லிஸ்டில் உள்ள முதியவர்களை களையெடுக்க தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது. புதியவர்கள் சிலருக்கு வாய்ப்பளிக்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது. ஐ பேக் கொடுத்த ஐடியா வொர்க் அவுட் ஆகுமா என்பதை மே 2-ம் தேதி வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

English summary
The iBack has given Stalin a separate list of seniors, excluding the most influential of the current MLAs in the DMK
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X