• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

சூரப்பாவை டிஸ்மிஸ் செய்க... கல்வியை காவிமயமாக்க அண்ணா பல்கலை. தான் கிடைத்ததா..? -ஸ்டாலின்

|

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத் துணை வேந்தர் சூரப்பாவை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

கல்வியை காவிமயமாக்க அண்ணா பல்கலை. தான் கிடைத்ததா என்றும் அவருக்கு வேறு இடமே கிடைக்கவில்லையா எனவும் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

திமுகவில் ஐக்கியமான பாமக மாநில நிர்வாகி... அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் முன் இணைப்பு..!

 5 ஆண்டுகளில்

5 ஆண்டுகளில்

ஐந்து ஆண்டுகளில் அண்ணா பல்கலைக்கழகத்தால் 1500 கோடி ரூபாய் நிதி திரட்டிக் கொள்ள முடியும். மாநில அரசின் நிதிப் பங்கீடு இல்லாமலேயே பல்கலைக்கழகத்தால் சமாளிக்கவும் முடியும். ஆகவே உயர் சிறப்பு அந்தஸ்தை அளிக்க வேண்டும் என்று, அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் திரு. சூரப்பா மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

தன்னிச்சையாக

தன்னிச்சையாக

அ.தி.மு.க. அரசின் சார்பில் இதுகுறித்து ஆராய்ந்து - கொள்கை முடிவு எடுக்க அமைச்சர்கள் குழு ஒன்று அமைக்கப்பட்டு - அந்தக் குழுவின் பரிந்துரை இன்னும் வெளிவராத சூழலில் - ஒரு துணை வேந்தர் எப்படித் தன்னிச்சையாக மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளார்? முதலமைச்சர் திரு. பழனிசாமி ரகசியமாகக் கொடுத்த "அனுமதி" காரணமா? என்ற சந்தேகம் எல்லோருக்கும் எழுகிறது.

சூரப்பாவுக்கு கண்டனம்

சூரப்பாவுக்கு கண்டனம்

துணைவேந்தராக இருக்கும் சூரப்பாவின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய இருக்கும் நேரத்தில்; தமிழகத்திற்கும் - மாணவர்களுக்கும் - எல்லாவற்றுக்கும் மேலாக, பேரறிஞர் அண்ணா அவர்களின் புகழ்ப் பெயருக்கும் - இப்படியொரு துரோகத்தைச் செய்ய அவருக்கு எப்படி தைரியம் வந்தது? தமிழகத்தில் நிலவும் இடஒதுக்கீட்டின் ஆணிவேரில் வெந்நீரை ஊற்றும் செயலில் ஒரு துணைவேந்தர் ஈடுபடுவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதோடு - துணைவேந்தரின் அதிகார அத்துமீறலுக்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 புரியாத மர்மம்

புரியாத மர்மம்

அண்ணா பல்கலைக்கழகம், தன்னிச்சையாக எப்படி நிதி திரட்டும்? அதுவும் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் சுமையாகவே மாறிவிடும். அப்படியொரு அபாயத்தை, போகிற போக்கில் திட்டமிட்டு ஒரு துணைவேந்தர் உருவாக்கியிருக்கிறார் என்றால் - கல்வியைக் காவி மயமாக்க அவருக்கு அண்ணா பல்கலைக்கழகம்தான் கிடைத்ததா? உலகம் முழுவதும் தமிழகத்தின் பெருமையை நிலைநாட்டிக் கொண்டிருக்கும் அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள துணைவேந்தர், தமிழ்நாட்டிற்கு விரோதமாகச் செயல்படுவதை எப்படி வேந்தராக இருக்கும் ஆளுநர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பதும் புரியாத மர்மமாக இருக்கிறது.

ஸ்டாலின் வலியுறுத்தல்

ஸ்டாலின் வலியுறுத்தல்

ஆகவே, இந்தக் கடிதம் எழுதப்பட்டிருப்பதில் முதலமைச்சருக்கு உடந்தை இல்லை எனில், இடஒதுக்கீட்டிற்கு எதிராகவும், மாநில நிதிஉரிமைக்கு விரோதமாகவும், மத்திய அரசுக்கு அண்ணா பல்கலைக்கழகம் தொடர்பாக, தன்னிச்சையாகக் கடிதம் எழுதியுள்ள துணைவேந்தர் திரு. சூரப்பாவை உடனே "டிஸ்மிஸ்" செய்ய வேண்டும் என்று வேந்தராக இருக்கும் தமிழக ஆளுநர் அவர்களுக்கு முதலமைச்சர் திரு. பழனிசாமி பரிந்துரை செய்ய வேண்டும்.

போராட்டம்

போராட்டம்

இடஒதுக்கீட்டுக் கொள்கையைக் காவு கொடுக்க முயற்சிக்கும் துணைவேந்தர் கடித விவகாரத்தில் அ.தி.மு.க. அரசு கால தாமதம் இன்றி நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞரணி, மாணவரணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

 
 
 
English summary
Stalin's demand to dismiss Anna University Vc Surappa
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X