சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

என்னதான் குட்டிக்கரணம் போட்டாலும்... எதிர்க்கட்சியாக கூட அதிமுக வரமுடியாது -மு.க.ஸ்டாலின் பேச்சு

Google Oneindia Tamil News

சென்னை: என்னதான் குட்டிக்கரணம் போட்டாலும், பிரச்சாரம் செய்தாலும் எதிர்க்கட்சியாக கூட அதிமுகவால் வரமுடியாது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் தேமுதிகவில் இருந்து இணைந்த 3,000 புதிய உறுப்பினர்களை வரவேற்று பேசிய அவர் இதனைக் கூறினார்.

மேலும், இது தொடர்பாக ஸ்டாலின் ஆற்றிய உரையின் விவரம் பின்வருமாறு;

கொரோனா தடுப்பூசி, அர்னாப்பிடம் ராணுவ ரகசியம்- மத்திய அரசு மீது ப.சிதம்பரம் ஹெவி அட்டாக்கொரோனா தடுப்பூசி, அர்னாப்பிடம் ராணுவ ரகசியம்- மத்திய அரசு மீது ப.சிதம்பரம் ஹெவி அட்டாக்

கருத்துக்கணிப்பு

கருத்துக்கணிப்பு

''சி-வோட்டர் அமைப்பின் கருத்துக்கணிப்பில் 19-வது இடம் பிடித்துள்ள முதலமைச்சர் பழனிசாமி, தனது தோல்விகளை மறைத்து அரசுப் பணத்தில் பக்கம் பக்கமாக விளம்பரம் செய்துக்கொண்டிருக்கிறார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு விளம்பரம் செய்ய முடியாது. கட்சியின் சார்பில் விளம்பரம் செய்தாலும் அதற்குக் கணக்குக் காட்ட வேண்டும்.''

முதலிடம்

முதலிடம்

''எனவே தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாகவே திட்டமிட்டு மக்களை எப்படியாவது மயக்கி விட வேண்டும் - எப்படியாவது ஏமாற்றி விட வேண்டும் என்பதற்காக, இப்படி மக்களின் வரிப்பணமாக இருக்கக் கூடிய அரசுப் பணத்தைச் செலவு செய்து கொண்டிருக்கிறார்கள். அந்த விளம்பரங்களைப் பார்த்தீர்களென்றால், உலகிலேயே இவர்தான் ஏதோ பெரிய சாதனை செய்த மாதிரி - மிகப்பெரிய அளவுக்கு விருதுகளை வாங்கியது போல எல்லாவற்றிலும் முதலிடம் முதலிடம் என்று மக்களை ஏமாற்றுகிற நிலையில் அந்த விளம்பரங்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.''

 70 விழுக்காடு

70 விழுக்காடு

''இன்றைக்கு ஊடகங்களில் நீங்கள் பார்த்திருக்கலாம்; சி-வோட்டர் என்ற அமைப்பு ஒரு கருத்துக் கணிப்பை வெளியிட்டு இருக்கிறது. அது என்னவென்றால், 22 மாநிலங்களில் கருத்துக்கணிப்பு எடுத்திருக்கிறார்கள். அதில் முதலமைச்சர் பழனிசாமி இருக்கக்கூடிய நம்முடைய தமிழகம் 19-வது மாநிலமாக இடம்பெற்றிருக்கிறது. பழனிசாமியின் ஆட்சியை எதிர்த்து 70 விழுக்காடு மக்கள் வாக்களித்துள்ளார்கள். இதையெல்லாம் மூடி மறைத்து இன்றைக்கு இருக்கும் இந்த ஆட்சி தவறான பிரச்சாரங்களைச் செய்து கொண்டிருக்கிறது.''

குட்டிக்கரணம்

குட்டிக்கரணம்

''நீங்கள் என்னதான் பிரச்சாரம் செய்தாலும் - குட்டிக்கரணம் போட்டாலும், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, ஆட்சிக்கு அல்ல; எதிர்க்கட்சியாகக் கூட நீங்கள் வர முடியாத சூழல் தான் நிலவுகிறது. கூட்டுறவு வங்கிகளில் நமது தாய்மார்கள் நகைகளை அடமானம் வைத்திருக்கிறார்கள். அவற்றை மீட்க முடியவில்லை. அதற்கான வட்டிக்கு வட்டி ஏறிக்கொண்டு இருக்கிறது. அதனால் தான் 5 சவரன் வரையிலான அந்தக் கூட்டுறவு நகைக் கடனை தள்ளுபடி செய்வோம் என்று நாடாளுமன்றத் தேர்தலின்போது அறிவித்தேன். அதனை இப்போதும் நினைவுபடுத்த விரும்புகிறேன்.''

English summary
Stalin says, AIADMK cannot even come as an opposition party
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X